கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் தனது யூடியூப் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெண்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பிரபல திரைப்பட டப்பிங் கலைஞர் பாக்கிய லக்ஷ்மி மற்றும் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள் தியா ஸனா, ஸ்ரீலட்சுமி ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள விஜய் நாயரின் வீட்டுக்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கி கரி ஆயில்(வாகங்களில் பயன்படுத்திய பழைய ஆயில்) ஊற்றி விட்டு சென்றனர். அதுமட்டுமல்லாது அவர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களையும் அழிக்க வைத்துள்ளனர்.
பெண் சமூக செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று விஜய் நாயரை தாக்கும் காட்சியை அவர்களே முகநூலில் நேரலை செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தாக்கிவிட்டு ஆவேசமாக பேசும் பெண்கள்
பாக்ய லக்ஷ்மி குழுவினர் கூட்டாக சேர்ந்து தாக்கும்போது விஜய் நாயர், "நீங்கள் மட்டும்தான் பெண்களா. வேறு யாரும் பெண்கள் இல்லையா" என கேட்கிறார். அதற்கும் பெண்கள் ஆவேசமாக தாக்குகிறார்கள். அதைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும்படி பெண்கள் அமைப்பினர் கூறுகிறார்கள். உடனே விஜய் நாயர், "கேரளத்தில் உள்ள பெண்களை, அறிந்தோ அறியாமலோ வேதனைப்படுத்தியிருந்தால் வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.
அதன்பின்னரும் விடாத பெண்கள் அவரது மொபைல் போனை எடுத்துக் கொடுத்து யூ டியூப்பில் இருந்து வீடியோக்களை அகற்றும்படி கூறினர். உடனே விஜய் நாயர் தனது மொபைல் லாக்கை அகற்றுகிறார். அந்த மொபைலை பறித்த பெண்கள் அமைப்பினர் யூடியூபில் இருந்து வீடியோவை அகற்றினர். சுமார் 11 நிமிடம் ஓடுகிறது அந்த வீடியோ. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனக்கூறி யூ டியூப் தளத்தில் விஜய் நாயர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் மீது பெண்கள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.யூடியூப் சேனல் நிர்வாகி விஜய் நாயர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்ய லக்ஷ்மி
இதுகுறித்து தம்பானூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை முயற்சி, அத்துமீறி நுழைதல், கூட்டமாக சேர்ந்து தாக்குதல் உள்ளிட்ட ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாக்ய லஷ்மியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விஜய் நாயர் மீதும் ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://dlvr.it/RhYWkn
Tuesday, 29 September 2020
Home »
» கேரளா: தரக்குறைவான வீடியோ... யூடியூப் சேனல் நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய பெண்கள்!