இப்போது குழந்தைகள் மேஜராவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை அடைவதற்கு முன்பே உடலியல் மற்றும் உளவியல் முதிர்ச்சியை அடைகிறார்கள் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி சஞ்சய் குமார், பெண் குழந்தைகள் தங்களின் சமவயது சிறுவர்களை விட முதிர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உண்மை.அதனால்தான் பெண்களுக்கான மேஜர் வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் இந்த வழக்கில், சுமார் 17 வயதுடைய ஒரு சிறுமியும், ஒரு பையனும் ஒருவருக்கொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டதாகவும், சிறுமியின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதியரை அச்சுறுத்துகிறார்கள் எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் சிறுமி மேஜராகும் வயதை அடையும் வரை, அந்த சிறுமி திருமணம் செய்துகொண்ட பையனின் தாயுடன் தங்க நீதிமன்றம் அனுமதித்தது. இதுகுறித்து “அவர்களின் வேண்டுகோளை பரிசீலிக்கும்போது, குழந்தை திருமணங்கள் தொடர்பான நமது சட்டங்களில் தெளிவு இல்லை. மேஜராகாத நபர்களுக்கு இடையிலான இந்து திருமணச் சட்டத்தில்கூட தெளிவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012ன்படி 18 வயதுக்குக் குறைவான ஒரு பெண்ணுடன் எந்தவொரு பாலியல் செயலையும் அல்லது உடலுறவையும் ஒரு குற்றமாக ஆக்குகிறது, அப்பெண் அவரது மனைவியாக இருந்தாலும் அது குற்றமே . விதிவிலக்கு 2 முதல் பிரிவு 375 ஐபிசி 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் உடலுறவு மற்றும் பாலியல் செயல்கள் வன்கொடுமை அல்ல என்று கூறுகிறது. இதுபோல பல முரண்கள் உள்ளன” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் “அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக நாம் அவரது பெற்றோரிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் அல்லது 18 வயதை எட்டும் வரை அவரை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது. எனவே அந்த சிறுமி 18 வயதை எட்டும் வரை காவல்துறை கண்காணிப்புடன் அந்த சிறுமி பையனின் தாயுடன் தங்கலாம், இதனை குழந்தைகள் நலக் குழு கண்காணிக்கவேண்டும்” எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
http://dlvr.it/RjvLfj
Monday, 19 October 2020
Home »
» திருமணம் முடித்த 17 வயது சிறுமி.... பையனின் தாயுடன் தங்க நீதிமன்றம் அனுமதி