கடந்த ஜூன் மாதம், 28-ம் தேதி, அதிகாலை 5:30 மணியளவில், டங்கர் சாலை சந்திப்பு நடைபாதை அருகே ஒரு சடலம் கிடப்பதாக மும்பை காவல்துறையினருக்குத் தகவல் வந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்தவரின் பெயர் டோனி என்பது தெரியவந்தது. கொலை
Also Read: `சென்னை வழக்கறிஞர் கொலை!’ - வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த ரௌடி கும்பல்
அவரைக் கொலை செய்ததாக அவரின் நண்பர் ஸ்ரீதர் யல்லமல்லியை (60) ஜே.ஜே.மார்க் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கொலையாளி கையில் `மேனகா’ என்று தமிழில் பச்சை குத்தப்பட்டிருந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே அவர் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்டு, கைதுசெய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள் மும்பை போலீஸார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ``ஸ்ரீதர் யல்லமல்லி, டோனி இருவரும் மும்பை நடைபாதைகளில் வசித்துவந்திருக்கிறார்கள். நண்பர்களான அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாகக்கொண்டிருந்திருக்கிறார்கள். கடந்த ஜூன் 27-ம் தேதி, டோனி தனக்கு மது வாங்கிவர ரூ.100-ஐ ஸ்ரீதரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஸ்ரீதர் அந்தப் பணத்தில் தன் நண்பருக்கு மது வாங்காமல், அவரே மது வாங்கிக் குடித்திருக்கிறார். இதனால் டோனி, ஸ்ரீதரோடு வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியிருக்கிறது. ஆத்திரமடைந்த ஸ்ரீதர் இரும்புக்கம்பியால் டோனியைக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.கொலையாளி கையிலிருந்த பச்சை
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்துவந்தோம். அப்போது, டோனியுடன் நெருக்கமாக ஒருவர் பழகிவந்ததாகவும், அவரது கையில் `மேனகா’ என்று தமிழில் பச்சை குத்தியிருந்த விவரமும் விசாரணையில் தெரியவந்தது. டோனி கொலையான பின்னர், அவர் சம்பவ இடத்திலிருந்து மாயாமாகியிருந்தார். அதனால், அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் நகரின் பல இடங்களில் தேடிவந்தோம். இது தொடர்பாக 150 பேருக்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொண்டோம். இறுதியாக, ஸ்ரீதர் மாதுங்கா ரயில் நிலையத்தில் தினமும் தூங்க வருவார் என்ற தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அவரை வளைத்துப் பிடித்தோம். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்றனர் மும்பை போலீஸார்.
http://dlvr.it/RjJxl6
Saturday, 10 October 2020
Home »
» நூறு ரூபாய்க்காகக் கொலை; தமிழ்ப் பெயர்! - 2 மாதங்களுக்குப் பிறகு துப்பு துலக்கிய மும்பை போலீஸ்