மத்திய அரசு கடந்த ஆண்டு 370-வது பிரிவை ரத்து செய்தது. இந்த பிரிவுதான் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. 370-வது பிரிவை ரத்து செய்ததுடன், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து. அதோடு, இந்தியாவின் பிற பகுதிகளோடு ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்கு பல்வேறு சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
With notification of UT of Jammu and Kashmir Reorganisation (Adaptation of Central Laws) Third Order, 2020, twelve state laws have been repealed as a whole out of the 26 others adapted with changes and substitutes. https://t.co/JeBB5UvdbZ— ANI (@ANI) October 27, 2020
இந்நிலையில், மத்திய அரசு நேற்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் மூலம், இந்தியக் குடியுரிமை உடையவர்கள் லடாக், ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். அதேநேரம், விவசாய நிலங்களை மட்டும் வாங்க இயலாது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவானது, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் ஆணை, 2020 என்று அழைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17-வது பிரிவில் ஜம்மு காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 60 ஆண்டுகளாக இருந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 2020-ல், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 2020 குடிமக்கள் சான்றிதழ் (நடைமுறை) விதிகளைத் திருத்தியது. இந்த நிலச் சட்டத் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read: `ஜம்மு காஷ்மீர் கொடி ஏற்றப்பட்டால்தான், தேசியக்கொடியை மேலெழுப்புவோம்’ - மெஹபூபா முப்தி உறுதி
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, `இந்த சட்டம் மூலம் விவசாய நிலங்கள் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்ற முடியாது. அதேநேரம், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகளை விவசாய நிலங்களில் ஏற்படுத்தத் தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன’ என்று கூறினார்.
Unacceptable amendments to the land ownership laws of J&K. Even the tokenism of domicile has been done away with when purchasing non-agricultural land & transfer of agricultural land has been made easier. J&K is now up for sale & the poorer small land holding owners will suffer.— Omar Abdullah (@OmarAbdullah) October 27, 2020
அதேநேரம், மத்திய அரசின் இந்த சட்டம் மூலம் ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``ஜம்மு-காஷ்மீர் நில உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதன்மூலம், விவசாய நிலங்கள் அல்லாதவையை வாங்குவதும், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதும் எளிதாகியுள்ளது. ஜம்மு -காஷ்மீர் விற்பனைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. குறைந்த அளவு நிலங்களை வைத்துள்ள நில உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/RkSMsB
Wednesday, 28 October 2020
Home »
» 60 ஆண்டுகால சட்டத்துக்கு முற்றுப்புள்ளி- இந்தியர்கள் ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம்!