‘வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும்’ என சிஎஸ்கே வீரர்களை சாடியுள்ளார் ஷேவாக். நடப்பு ஐபிஎல் சீசனின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் கேதர் ஜாதவ் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி 3 பந்துகளில் ஜடேஜா சிக்ஸரும், 2 பவுண்டரியும் அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் கேதர் ஜாதவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கூறுகையில், ‘’168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. என்னை பொருத்தவரையில் அந்த அணியில் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போல் கடமைக்கு விளையாடி வருகிறார்கள்’’ என்றார். வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை தனது பாணியில் கிண்டலாக சுட்டிக் காட்டியுள்ளார் ஷேவாக்.
http://dlvr.it/RjGVwl
Friday, 9 October 2020
Home »
» ‘சிஎஸ்கே வீரர்கள் அரசு ஊழியர்களைப்போல் விளையாடுகிறார்கள்..’ ஷேவாக் சாடல்