தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்த தெருவிலும், பால்கனியிலும் நின்றபடி பாடம் கற்பிக்கின்றனர் இத்தாலிய ஆசிரியர்கள். கடந்த மார்ச் மாதம் இத்தாலி நாட்டையே தலைகீழாக புரட்டிப் போட்ட கொடிய கொரோனா பாதிப்பு அதன்பின்னர் கட்டுக்குள் வந்தது. இத்தாலியில் பல இன்னல்களுக்கு பிறகு ஒரு வழியாய் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு விட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கை காரணமாக ஒவ்வொரு வகுப்பிலும் பாதி மாணவர்களே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இத்தாலியின் நேபிள்ஸில் நகரில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியதைத் தொடர்ந்து அந்நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் இறுதிவரை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் மீண்டும் அடைக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் கவலையடைந்தனர். இதையடுத்து நேபிள்ஸில் உள்ள ஆசிரியர்கள் புதுமையாக ஒரு முயற்சி எடுத்தனர். மாணவர்களை தெருக்களிலும், பால்கனிக்கும் வரவழைத்து ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதற்காக காம்பானியா எனும் ஒரு பகுதி முழுக்க ஆசிரியர்கள் வலம்வந்து மாணவர்களை சந்தித்து பாடம் போதிக்கின்றனர். ஆசிரியரான ஸ்டோர்னாயுலோ கூறுகையில், ‘’குழந்தைகள் எங்களைப் பார்க்கவும், எங்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நடமாடும் கல்வி கற்பிப்பு முறை உதவுகிறது’’ என்றார்.
http://dlvr.it/Rk59nz
Thursday, 22 October 2020
Home »
» தெரு, பால்கனியில் நின்றபடி பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்..