கேரள மாநிலம், திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியதாக சிவசங்கரனிடம் சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்டவை விசாரணை நடத்திவருகின்றன. சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் என்பதால் தலைமைச் செயலகத்திலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலகத்திலுள்ள சில ஃபைல்களையும் என்.ஐ.ஏ கேட்டிருக்கிறது. இந்தநிலையில் திருவனந்தபுரத்திலுள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தின் பொதுப்பிரிவு கட்டடத்திலுள்ள புரோட்டோக்கால் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. அந்தத் தீவிபத்தில் தங்கம் கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்ட ஃபைல்கள் எரிந்து நாசமானதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இது விபத்து அல்ல, திட்டமிட்டு ஃபைல்கள் எரிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டினர். இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தின.கேரள முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் சில மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் சில மீடியாக்கள் வேண்டுமென்றே அரசுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியதாக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகாரளிப்பது என முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மீடியாக்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Also Read: கேரளா: பினராயி விஜயன் சேர்மனாக இருக்கும் `லைஃப் மிஷன்' திட்டத்தில் கமிஷன் அடித்த ஸ்வப்னா?
`தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட மின்கசிவுதான் காரணம்’ என அரசு நியமித்த நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிவித்தனர். இந்தநிலையில், தடயவியல் பரிசோதனையில் தீவிபத்துக்கு மின் கசிவு காரணம் அல்ல என கூறப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபாரன்சிக் லேபிலுள்ள இயற்பியல்துறை சி.ஜே.எம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் இந்தத் தகவல் இருப்பதாகவும், அதே ஃபைல்களின் காப்பி விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
தீவிபத்து ஏற்பட்ட அன்று, மாவட்ட தடயவியல்துறை அதிகாரி தலைமையிலான குழு தலைமைச் செயலகம் சென்றது. தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து 24 வகையான சாம்பிள்களை சேகரித்திருக்கிறது. இவற்றில், சாம்பல் உள்ளிட்டவையும் அடக்கம். இவற்றை ஆய்வு செய்ததில் தலைமைச் செயலகத்தில் தீப்பிடிக்க ஷார்ட் சர்க்யூட் காரணம் என்று கண்டுபிடிக்க எந்த சாம்பிளிலும் ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், ஃபைல்கள் மட்டுமே எரிந்திருக்கின்றன, சானிடைஸர் உள்ளிட்ட வேறு பொருள்கள் எரியாததால், ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்க வாய்பு இல்லை எனவும் ரிசல்ட் வந்திருக்கிறது.
இது குறித்து கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "உண்மையை மறைத்துவைக்கும் அரசின் மற்றொரு முயற்சியும் தோல்வியடைந்தது. தீ எரிந்தது குறித்து நீதி விசாரணை வேண்டும்" என்றார்.
Also Read: கேரள தலைமைச் செயலகத்தில் தீ; தங்கக் கடத்தல் வழக்கு ஆவணம் எரிந்ததா? - கொதிக்கும் எதிர்கட்சிகள்
இது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``ஃபாரன்சிக் ரிப்போர்ட் குறித்துத் தெரியவில்லை. சீல் செய்த கவரில் ரிப்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது" என்றார்.
http://dlvr.it/Rj6w3q
Wednesday, 7 October 2020
Home »
» `கேரள தலைமைச் செயலகத் தீவிபத்துக்கு மின்கசிவு காரணம் அல்ல!' - ஃபாரன்சிக் ரிப்போர்ட்