கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் சோனா(வயது 30). இவர் கூத்தாட்டுக்குளம் அருகே உள்ள கூட்டநெல்லூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவர் வசதி படைத்தவர் என்பதை அறிந்த பாவறட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சோனாவிடம் நெருங்கி பழகினார். இவர்களது பழக்கம் நட்பாக மாறியது. மகேஷ் அடிக்கடி சோனாவுக்கு உதவுவது போல் நடித்து நட்பை காதலாக மாற்றி உள்ளார். சோனாவும் மகேஷை மிகவும் நம்பி அவருடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்யாமலே இருவரும் ஒன்றாக வாழத்தொடங்கினர். இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிது சிறிதாக சுமார் 22 லட்சம் ரூபாய் வரை சோனாவிடம் இருந்து மகேஷ் பெற்றிருக்கிறார்.கைது செய்யப்பட்ட மகேஷ்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சோனா தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மகேஷிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப கொடுக்க மகேஷ் மறுத்துள்ளார். பலமுறை கேட்டும் பணம் திரும்ப கொடுக்காததால், இதுகுறித்து ஒல்லூர் காவல் நிலையத்தில் சோனா புகார் அளித்துள்ளார். இதை அறிந்த மகேஷ் சோனாவின் கிளினிக்கிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோனாவின் வயிற்றில் குத்தியிருக்கிறார். சோனா ரத்த வெள்ளத்தில் சரியவும், மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
சோனா கத்தியால் குத்தப்பட்டதை பார்த்த அப்பகுதியினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சோனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனாவுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சோனா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான மகேஷை போலீஸார் இன்று காலை திருச்சூர் மாவட்டம் பூங்குன்னம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் சோனா
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சோனா வசதி படைத்தவர் என்பதையும், அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்வது தெரிந்ததாலும் மகேஷ் அவரை நெருங்கியுள்ளான். சோனாவிடம் பணம் கறப்பதுதான் மகேஷின் திட்டமாக இருந்திருக்கிறது. இதுபோன்று வேறு பெண்களிடம் மகேஷ் கைவரிசை காட்டியிருக்கிறாரா என்பது பற்றி விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
http://dlvr.it/Rj9ff8
Thursday, 8 October 2020
Home »
» கேரளா: ஒரே வீட்டில் வாழ்க்கை.. பணத்தால் வந்த பிரச்னை! - பெண் மருத்துவர் கொலையில் நடந்தது என்ன?