கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து மேக்ஸ்வெல் நீக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் தோற்றது. பின்னர் 2வது போட்டியில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணியில் விளையாடும் கேப்டன் கே.எல்.ராகுல் உட்பட அனைத்து வீரர்களுக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இல்லையேன்றால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் எந்தப் போட்டியிலும் மேக்ஸ்வெல் அடிக்கவில்லை என்றும், இதுபோன்ற ஒருவரை அணியில் வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய வீரர் ஓஜா கூறும்போது, “கே.எல்.ராகுல் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரியில்லை என்பது அவருக்கு தெரிந்துள்ளது. 200 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆடும்போது, தானோ அல்லது மயங்க் அகர்வாலோ அடிக்கவில்லை என்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கமாட்டார்கள் என்பதை ராகுல் நன்கு அறிந்திருக்கிறார். அணில் கும்ப்ளே கிரிஸ் கெயிலை விளையாடவைக்கவுள்ளதாக கூறுகிறார். ஆனால் அவர் உடல்நிலை சரியாக இல்லை. அதேசமயம் மேக்ஸ்வெல் ராகுலின் பாரத்தை குறைக்கத்தவறிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் 6 போட்டிகளிலும் பேட்டிங் செய்துள்ள மேக்ஸ்வெல் 1, 5, 13, 11, 11* மற்றும் 7 சொற்ப ரன்களையே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RjJxmL
Saturday, 10 October 2020
Home »
» ”எந்தப் போட்டியிலும் அடிக்காத மேக்ஸ்வெல் அணியில் எதற்கு?” : கெவின் பீட்டர்சன்