உத்தப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள்போல் மாஃபியா ஆட்சி நடத்தும் மாநிலமாக மேற்குவங்கம் மாறிவருவதாக அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதற்கு மேற்குவங்க ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், `குறைந்தபட்சம் அந்த மாநிலங்களில் மாஃபியா ஆட்சி நடத்திவருவதாக பா.ஜ.க ஒப்புக்கொண்டிருக்கிறதே...’ என்று பதிலடி கொடுத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்துவரும் நிலையில், பீகாரில் பா.ஜ.க அங்கம்வகிக்கும் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் ஆட்சி நடக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின், டிட்டாகர்க் பகுதியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மணீஷ் சுக்லா சுட்டுக்கொல்லப்பட்டார். டிட்டாகர்க் நகர கவுன்சிலரான மணீஷ் சுக்லாவை டூ வீலரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய திலீப் கோஷ், ``உ.பி, பீகார் மாநிலங்களைப்போல மாஃபியா ஆட்சி நடக்கும் மாநிலமாக மேற்குவங்கத்தின் சூழலுல் மாறிவருகிறது.
Also Read: பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?
காவல் நிலையம் முன்பாகவே கவுன்சிலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மேற்குவங்கத்தில் 120-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மணீஷ் சுக்லா போன்ற பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேற்குவங்கத்தில் இந்தச் சூழல் இருக்கும் நிலையில், வெளிப்படையான, நேர்மையான தேர்தல் எப்படி நடக்கும்?'' என்று கேள்வி எழுப்பினார். திலீப் கோஷ்
திலீப் கோஷின் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கிம்,``பா.ஜ.க ஆட்சியிliருக்கும் உ.பி., பீகாரில் மாஃபியாக்களின் ஆட்சி நடக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த ஒரு முறையாவது அவர் உண்மையைப் பேசுகிறார் என்று நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
http://dlvr.it/Rj35J6
Tuesday, 6 October 2020
Home »
» `உ.பி., பீகார்போல் மாஃபியா ஆட்சி மாநிலமாகிவருகிறது மேற்குவங்கம்!' - பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ்