ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு, பல கட்டுப்பாடுகளை அந்தப் பகுதிகளில் விதித்தது. அணிவகுப்பு மற்றும் பேரணிகளைத் தடைசெய்தல், இணையதள சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களை அந்தப் பகுதியில் அதிக அளவில் நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்பு காவலில் வைத்தனர்.மெஹ்பூபா முப்தி
இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அங்கு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுவந்தனர். இருப்பினும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி மட்டும் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெஹ்பூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது. அவரின் விடுதலை தொடர்பாக நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் 14 மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முப்தி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்திருக்கிறார். மெஹ்பூபா முப்தியின் ட்விட்டர் பக்கத்திலும் அவரது விடுதலை தொடர்பாகக் கருத்துகள் பதியப்பட்டிருந்தன.
Also Read: `சப்பாத்தியில் மறைத்துக் கடிதம் எழுதினேன்!’ -தாயுடன் பேசிய ரகசியத்தைப் பகிரும் மெஹ்பூபா முப்தி மகள்மகள் இல்டிஜா -மெஹ்பூபா
விடுதலை செய்யப்பட்டப் பின்னர் மெஹ்பூபா முப்தி ஆடியோ மூலம் மக்களிடம் பேசுகையில், ``டெல்லி தர்பார் சட்ட விரோதமாகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் நம்மிடமிருந்து பறித்தவற்றை நாம் திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமல்ல, காஷ்மீரின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான் எத்தனையோ காஷ்மீரிகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அதை நாம் பெறுவதற்கான பாதை நிச்சயம் எளிதானதாக இருக்காது. ஆனால் கடினமான முயற்சிகள் தொடர வேண்டும். இன்னும் சட்டவிரோதமாகத் தடுப்பு காவலில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை அன்று மெஹ்பூபா, செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
உமர் அப்துல்லாவும் அவரின் தந்தை ஃபரூக் அப்துல்லாவும் தடுப்பு காவலிலிருந்து கடந்த மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
Also Read: `டிப்ஸ் வேண்டுமா.. குவாரன்டைனில் 8 மாத அனுபவம் இருக்கு..!’ -விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா
http://dlvr.it/RjZlTx
Wednesday, 14 October 2020
Home »
» `நம்மிடம் இருந்து பறித்தவற்றை நாம் திரும்பப் பெற வேண்டும்!’ - விடுதலைக்குப் பின் மெஹ்பூபா முப்தி