ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை; அதைத் தொடர்ந்த காவல் துறை, நீதித்துறையின் அதிர்ச்சி தரத்தக்க நடவடிக்கைகள்; உடலைக்கூட, பெற்றோரை வீட்டில் சிறைப்படுத்திவிட்டு எரித்த கொடூரம்; தொடரும் உத்தரப்பிரதேச அரசின் அடக்குமுறைகள்; வழக்கம் போல பாரதிய ஜனதாக் கட்சியினரின் பொறுப்பற்ற பேச்சுகள் எனக் காட்சிகள் தொடர்ந்து விரிந்துகொண்டே இருக்கின்றன.
நடந்திருப்பது பாலியல் வன்முறை என்கிற ஒரு தனித்த குற்றச் செயல் என்பதே பொதுவாக உரத்துச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அதுதானா?
... இது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் தன்மானம் சார்ந்த பிரச்னை. எதிரியின் தோட்டத்து ஆடுமாடுகளைக் கவர்வது போல் ஒரு கூட்டத்தின் பெண்களை எடுத்துக் கொள்வதும் குழு வாழ்க்கையிலிருந்து ஆணாதிக்க மனங்களில் பதிந்துபோன ஒரு விஷயம்தான். அதுதான் தொடர்ந்து நடக்கிறது. ஆதிக்க வெறி இங்கு சாதி வெறியாகத் தலைவிரித்தாடுகிறது. மதுரா… நிர்பயா என்று சமூக அடையாளங்களிலிருந்து பிரித்தெடுத்து வெறும் பாலியல் வன்கொடுமையாக இக்கொடுமைகளைச் சுருக்கிக்கொண்டு போக முடியாது. அப்படிப் பார்ப்பதன் விளைவுதான் அப்படியே இந்தப் பிரச்னையை நீர்த்துக் கொண்டு போய் பாதிக்கப்பட்டவர்களுக்கே அறிவுரை கூறும் அரைவேக்காட்டு ஆலோசனைகளில் முடிந்து போகிறது.பாலியல் வன்கொடுமை
ஒவ்வொரு பாலியல் வன்முறை நடக்கும் போதும் அது குறித்துப் பெரிய கூக்குரல் ஒன்றினை இந்த நாடு ஒருமித்து எழுப்புகிறது. ஆனால் வசதியாக அந்தக் குற்றத்தின் முழுப் பரிணாமத்தையும் மறைத்துவிட்டு ஏதோ சில இளைஞர்களை மட்டும் குற்றவாளிகளாகக் கையைக் காட்டுகிறது. அவர்களை மட்டும் தூக்கில் போடச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறது. 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பது வள்ளுவன் கூற்று. இங்கு நோய் பற்றிய ஆய்வறிக்கையே முழுமையாகத் தயாரிக்கப் படுவதில்லை. முதலில் இதைப் பெண்கள் பிரச்னையாக மட்டும் பார்ப்பதே தவறு. இது சாதிப் பிரச்னை. இதை சாதிப் பிரச்சினையாகவும் அணுகினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்...ஓவியா
- பெண்ணியலாளர் ஓவியா எழுதிய கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > ஆணாதிக்கம் மட்டுமா இந்த அநீதிக்குக் காரணம்? https://bit.ly/3iOHU0x
குற்றப்பிரதேசம்!
தேசம் முழுக்கக் கோப அலைகள் பொங்கி வந்ததைப் பார்த்த பிறகு, அலகாபாத் நீதிமன்றமே அதிர்ந்து வாய் திறந்த பிறகு, 'நியூயார்க் டைம்ஸ்' முதல் 'கார்டியன்' வரை சர்வதேச அளவில் ஹத்ராஸ் கொடூரம் ஒரு விவாதப் பொருளாக மாறிய பிறகு, இரண்டாவது மோடியாகவும் பிரகாசமான பிரதமர் வேட்பாளராகவும் இந்துத்துவ ஆதரவாளர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் உ.பி முதல்வர் ஆதித்யநாத் யோகி சிடுசிடுப்போடு அசைந்துகொடுக்கவே ஆரம்பித்தார். அப்போதும்கூட, ஒரு பக்கம் சிபிஐ விசாரணை என்று அறிவித்துவிட்டு இன்னொரு பக்கம் ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு எதிரான பிரசாரப் போரையே அவர் முன்னெடுத்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தைப் பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களும்கூட ஹத்ராஸ் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்பதை அறிவார்கள். இந்த நிமிடம்வரை உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணால் குறைந்தபட்சம் காவல் நிலையத்துக்குச் சென்று தனக்கு நேர்ந்ததை ஒரு புகாராகக்கூடப் பதிவு செய்யமுடியாது என்பதுதான் உண்மை.
அலிகாரில் பாலியல் வன்முறையை எதிர்கொண்ட ஒரு பட்டியலினப் பணிப்பெண் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றபோது, அங்குள்ள அதிகாரி ஒருவர் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'உன்னைத் தொல்லை செய்யும் அளவுக்கு அப்படியொன்றும் நீ அழகாக இல்லையே' என்று சொல்லித் திருப்பியனுப்பியிருக்கிறார்.அணையாது எரியும் அநீதி! - குற்றப்பிரதேசம்
அம்ரோஹாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 19 வயதுப் பெண் தன் தந்தையுடன் காவல் நிலையம் சென்றபோது ஓர் அதிகாரி அமர வைத்து அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கிறார். 'இதோ பாருங்கள், புகாரெல்லாம் கொடுப்பதன்மூலம் ஒரு பயனும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதில் சாதியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது. பேசாமல் சம்பந்தப்பட்ட இருவருக்கும் திருமணம் பேசி முடித்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.'
- மருதன் எழுதிய சிறப்புக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அணையாது எரியும் அநீதி! - குற்றப்பிரதேசம் https://bit.ly/33FQeeE
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
http://dlvr.it/RjBlfM
Thursday, 8 October 2020
Home »
» ஒரு சம்பவம்... இரு பார்வைகள்: சாதிப் பிரச்னையும் குற்றப்பிரதேசமும்!