கேரள மாநில அரசு போலீஸ் சட்டத் திருத்த மசோதா ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவசரமாகக் கொண்டு வந்து, கவர்னரின் ஒப்புதலையும் பெற்றது. அந்த மசோதாவின் மூலம் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது போலீஸ், தாமாக முன்வந்து புகார் வழக்கு பதிவு செய்ய முடியும். சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் நபர் என்றில்லாமல், மூன்றாவதாக ஒருவர் புகார் அளித்தாலும் அது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் கைதுசெய்து சிறையில் அடைக்க, இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது. கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
`சமூக வலைதளம் மட்டுமல்லாமல், எல்லாவிதமான ஆன்லைன் ஊடகங்கள் மீதும் இதே நடவடிக்கை பாயும். எனவே, இது ஊடகங்களை ஒடுக்கும் செயல்’ என்றரீதியில் பினராயி விஜயனின் அரசுக்கு எதிராகக் குரல் எழுந்தது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
Also Read: `ஆதாரங்களை அழிப்பதைத்தான் முதல்வர் செய்துகொண்டிருக்கிறாரா?'- கொதித்த பினராயி விஜயன்
``புகார்தாரர் இல்லாமலேயே போலீஸ் வழக்கு பதிவு செய்யும்விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒரு செய்தியோ, புகைப்படமோ, கருத்தோ உண்மையானதா அல்லது அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறதா என்பதை காவல்துறையா முடிவு செய்யும்? இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம், பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் அரசின் மோசமான செய்திகளை யாரும் விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால் சிறையில் அடைப்போம் என்ற மிரட்டல்தான் இந்தப் புதிய சட்ட மசோதா" என்கிறார் கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா. போலீஸ் சட்டத் திருத்த மசோதா, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன.சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி
இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.பி.எம் தேசியப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ``கேரள போலீஸ் சட்டத் திருத்தம் மறு பரிசீலனை செய்யப்படும். அதில் தேவையான திருத்தம் ஏற்படுத்தி அச்சம் அகற்றப்படும்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, `போலீஸ் சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். மேலும், சட்டசபையில் விவாதம் நடத்தி அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை மூலம் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/RmJBGs
Tuesday, 24 November 2020
Home »
» கேரளா: `வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுச் சிறை!’ - எதிர்ப்பால் பின்வாங்கிய பினராயி விஜயன்