துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்காக ரோகித்தும், டி காக்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். ஆரம்பம் முதல் டெல்லி பந்துவீச்சை அதிரடியாக அடித்து விளையாடினர் இருவரும். A well made half-century for @ImRo45 in his 200th outing in the IPL.He also breaches the 3000-run mark as Captain.#Dream11IPL #Final pic.twitter.com/siJMPAWEWW — IndianPremierLeague (@IPL) November 10, 2020 21 பந்துகளில் 41 ரன்களை குவித்தனர். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். டி காக் 20 ரன்களில் அவுட்டானார். ரோகித் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர்களது ஆட்டம் ‘மும்பைக்கு தான் கோப்பை’ என அடித்து சொல்வதை போல இருந்தது. தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித்துடன் அதிரடியாக விளையாடினார்.
4000 runs in Blue & Gold for @ImRo45 ??#Dream11IPL pic.twitter.com/59YXjn9obB— IndianPremierLeague (@IPL) November 10, 2020 அஷ்வின் வீசிய 11வது ஓவரில் சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித். இருப்பினும் அதற்கு ‘நோ’ சொல்லியிருந்தார் சூர்யகுமார் யாதவ். அதற்குள் ரோகித் கிரீஸை கடந்துவிட்டார். இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூர்யகுமார் யாதவ். அதையடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் ஆட்டத்தை விரைவில் முடிக்கும் நோக்கத்துடன் 33 ரன்களை சேர்த்தார். மறுபக்கம் ரோகித் 68 ரன்களில் அவுட்டானார். பொல்லார்டும் இரண்டு பவுண்டரிகளை அடித்த கையேடு பெவிலியன் திரும்பினார். #MumbaiIndians WIN #Dream11IPL 2020 pic.twitter.com/1zU6GOj6Mj — IndianPremierLeague (@IPL) November 10, 2020 ரபாடா, அஷ்வின், அக்சர் பட்டேல் மாதிரியான பவுலர்கள் விக்கெட் வீழ்த்தாமல் போனதும் டெல்லியின் வீழ்ச்சிக்கு காரணமானது. 18.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. இந்த வெற்றியின் மூலம் மும்பை ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
http://dlvr.it/RlQyrj
Wednesday, 11 November 2020
Home »
» டெல்லியை கலங்க வைத்து கெத்தாக கோப்பையை வென்ற மும்பை அணி!