கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் ரூ50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய நிதிஷ் சர்தா மற்றும் பர்வீன் ராஜேஸ் சிங் ஆகியோருக்கும் ரூ50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. முன்னதாக, கடந்த 2018இல் அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வல்லுநர் அன்வாய் நாயக் என்பவரும், அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு காரணம் அர்னாப் தான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டிய மகாராஷ்டிரா போலீசார் அர்னாப் மற்றும் இருவரை கடந்த 4ஆம் தேதி கைது செய்தது. மாஜிஸ்ரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்திய நிலையில் அர்னாபை நவம்பர் 18 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து அவர் தற்போது சிறையில் வைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனு கொடுத்திருந்த நிலையில் அதை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம். மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மனு வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடினார் அர்னாப் கோஸ்வாமி. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
http://dlvr.it/RlVt93
Thursday, 12 November 2020
Home »
» ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்