மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ வினோத் டாகா கோயிலில் வழிபாடு நடத்தும்போது மாரடைப்பால் காலமானார். இக்காட்சிகள் கோயில் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி காலை, வினோத் டாகா தனது அன்றாட வழக்கத்தை பின்பற்றி பெதுலில் உள்ள ஜெயின் தாதாவாடி (சமண கோயில்) வழிபாட்டிற்கு சென்றார். கோயில் சிலைக்கு முன்னால் பிரார்த்தனை செய்யும் போது டாகா திடீரென்று சரிந்து விழுந்து மரணமடைந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டின. அண்மையில் நடந்த மத்தியப் பிரதேச சட்டசபை இடைத்தேர்தலில் டாகா, மெஹ்கான் தொகுதிக்கு பொறுப்பாளராக இருந்தார். சம்பவம் நடந்த அன்று காலையில், எம்.எல்.ஏ.போபாலில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பெதுலுக்கு திரும்பியிருந்தார். காங்கிரஸின் மாநில பொருளாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் உட்பட பல முக்கியமான பதவிகளை டாகா வகித்துள்ளார். அவரது மரணம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பு என்று அக்கட்சியினர் கூறியுள்ளனர். Ex Congress MLA Vinod daga dies of Cardiac Arrest while worshipping..incident caught on CCTV..May his soul rest in peace..@pankajbajpai22 @i_m_dollar @INCIndia @betul_talks @INCMP pic.twitter.com/fCFpfIRNQ2 — Gagan Sharma (@gagansharma2586) November 16, 2020
http://dlvr.it/RlnjGg
Monday, 16 November 2020
Home »
» வழிபாடு நடத்தும்போது மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ