மத்திய பிரதேச மாநிலம் தன்பூர் பகுதியில், தனது மத பழக்கவழக்கங்களை தான் பின்பற்ற வேண்டும் என கணவன் வற்புறுத்தியதாக மனைவி அளித்த புகாரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (29.11.2020) செய்தியாளர்களிடம் பேசிய தன்பூர் பகுதிக்குட்பட்ட துணை காவல்துறை அதிகாரியான பாரத் துபே, ``இந்து மதத்தைச் சேர்ந்த புகாரளித்த பெண் 2018-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர், மத்திய பிரதேச மாநிலம் தன்பூரில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணையும், அப்பெண்னின் உறவினர்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்தல் செய்வதோடு, உருது மற்றும் அரபு மொழிகளை கற்க கூறி அழுத்தம் தருவதாக அப்பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள கணவரை மத சுதந்திர சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
‘திருமண நோக்கத்துக்காக மட்டும் மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர மசோதா விரைவில் அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் உட்பட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான கர்நாடகா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மதச் சுதந்திர சட்டம் அமல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
Also Read: `மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா 2020’ - கேள்வி கேட்பவர்களை மிரட்ட இன்னோர் ஆயுதமா?
இச்சட்டத்திற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rmj1D6
Monday, 30 November 2020
Home »
» ம.பி: `மத நம்பிக்கையை மாற்ற வற்புறுத்துகிறார்!’ - மனைவியின் புகாரால் கணவன் கைது