காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்துவந்த கில்கித்-பல்திஸ்தான் (Gilgit-Baltistan) பகுதிகள், 1947-ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குச் சென்றன. அதிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளாக அறியப்படும் இந்தப் பகுதிகளில் பாகிஸ்தான் அரசு வரும் நவம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி, அதை பாகிஸ்தானின் 5-வது மாகாணமாக மாறறுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அறிவித்தார். இம்ரான் கான்
இதற்கு பதிலளித்த இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், `கில்கித்-பல்திஸ்தான் உட்பட ஜம்மு காஷ்மீர், லடாக்கின் ஒட்டுமொத்த பகுதிகளும் 1947-ம் ஆண்டு இணைப்பின்படி, இந்திய நாட்டுக்கு உட்பட்ட பகுதிகள். கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்தப் பகுதிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்கிருக்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவருகிறது. இதனால் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்’ என்று கூறியது.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடக்கவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டை நினைவுகூரும்விதமாக 20-ரியால் (சவுதி நாட்டின் செலவாணி) நோட்டைக் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. இதன் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருந்த வரைபடத்தில் காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளாகக் கூறப்படும் கில்கித்- பல்திஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி, புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சவுதி அரேபியாவின் இந்த நகர்வு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்தது.
Also Read: காஷ்மீர்: PoK பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கிய சவுதி அரேபியா! - என்ன நடந்தது?இந்தியா, பாகிஸ்தான்
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ``பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அந்த நாட்டு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்திய அரசு உறுதியாக நிராகரிக்கிறது. கில்கித்-பல்திஸ்தான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். 70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அதை எவராலையும் மறுக்க முடியது” என்றார்.
http://dlvr.it/Rkq3SL
Monday, 2 November 2020
Home »
» `அது இந்தியாவின் பகுதி... உங்களுக்கு உரிமை இல்லை!’ - பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா