ஷார்ஜாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதற்கான இறுதி வாய்ப்பாக இந்த ஆட்டத்தில் விளையாடியது. வெற்றி பெற்றால் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்தில் விளையாடினார். அவரது வருகை மும்பை அணிக்கு பலமாக சேர்ந்த நிலையில், போல்ட் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. டி காக்கும், ரோகித் ஷர்மாவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் POWERFUL நாக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தீப் ஷர்மா வீசிய மூன்றாவது ஓவரில் மிட் ஆப் திசையில் பெரிய ஷாட் அடிக்க முயன்று வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோகித் ஷர்மா. தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கிரீஸுக்குள் வந்தார். மறுபக்கம் விளையாடிக் கொண்டிருந்த டி காக் 13 பந்துகளில் 25 ரன்களை அடித்த நிலையில் சந்தீப் ஷர்மா வீசிய ஐந்தாவது ஓவரில் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே போடப்பட்ட ஃபுள் டாஸ் பந்தை ஷாட் அடிக்க முயன்று இன்சைட் எட்ஜாகி, பந்து ஸ்டெம்பை பதம் பார்த்ததால் வெளியேறினார். பவர்பிளே ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்து தடுமாறியது மும்பை. இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் இணைந்து 42 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் ஏழு பந்துகளில் சூரியகுமார் யாதவ், குருனால் பாண்ட்யா மற்றும் சவுரப் திவாரியின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பினர் ஹைதராபாத் பவுலர்கள். அதில் ஷபாஸ் நதீம் 12வது ஓவரில் இரண்டு விக்கெட்டை வீழியிருந்தார். இஷான் கிஷனும் 17வது ஓவரில் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததால் மும்பையின் பேட்டிங் லைன் அப் டோட்டலாக டேமேஜானது. அந்த அணியின் பொல்லார்ட் மட்டும் ஒற்றையாளாக 25 பந்துகளில் 41 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது மும்பை. ஹைதரபாத் அணிக்காக சந்தீப் ஷர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதோடு ஐபிஎல் போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் சந்தீப் ஷர்மா. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணிக்காக கேப்டன் டேவிட் வார்னரும், சாஹாவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் மும்பை பவுலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பெரிய ஷாட்களை ஆடாமல் கிளாசிக்காக பவுண்டரி விளாசி இருந்தனர் இருவரும். வார்னர் 58 பந்துகளில் 85 ரன்களும், சாஹா 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். 17.1 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை எடுத்து மும்பையை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஹைதராபாத். இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெளியேற்றி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது ஹைதராபாத் அணி. டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை என தொடர்ச்சியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த மூன்று அணிகளை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது வார்னர் தலைமையிலான ஹைதராபாத். எலிமினேட்டரில் பெங்களூர் அணியுடன் ஹைதராபாத் வரும் 6ஆம் தேதியன்று விளையாட உள்ளது ஹைதராபாத்.
http://dlvr.it/Rkxlq5
Wednesday, 4 November 2020
Home »
» டேபிள் டாப்பர்களை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்