ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள சிறிய நகரம் எலூரு. இங்கு வசித்துவரும் மக்கள் நேற்று முதல் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வாந்தி, கை கால் வலிப்புணர்வுடன் மயக்கமடைவதுபோல் உணரத் தொடங்கினர். இதனால், அலெர்ட்டான நகராட்சி, பாதிக்கப்பட்ட மக்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆந்திரா - எலூரு
Also Read: `கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடையதா?!' -அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குழந்தைகளை தாக்கும் மர்ம நோய்
இந்த திடீர் பாதிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுவரை சுமார் 350 பேர் எலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 164 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இதற்குக் காரணம், குடிநீர் மாசுபாடா அல்லது தொழிற்சாலை நச்சுக்கழிவு உள்ளிட்டவை காரணமா என மாநில சுகாதாரத் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. நகராட்சி சார்பில் 24 மணி உதவி மையமும் திறக்கப்பட்டிருக்கிறது. கொதிக்கவைத்த நீரையே அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, தேசிய ஊட்டச்சத்து நிறுவன விஞ்ஞானிகள், ஹைதராபாத் தேசிய வேதியியல் நிறுவன விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஆகியவை எலூருக்கு விரைந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய ஆந்திர துணை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அல்ல காளி கிருஷ்ணா (Alla Kali Krishna), ``மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள எலூரில் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. லேசான மயக்கம், கை கால் வலிப்புணர்வுடன் எலூர் அரசு மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துவிதமான சிகிச்சை உதவிகளும் அளிக்கப்பட்டுவருகின்றன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார். ஆந்திரா - எலூரு
சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்ய இன்று எலூரு செல்லும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார். மேலும், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்துகிறார்.
http://dlvr.it/RpD0JQ
Wednesday, 23 December 2020
Home »
» ஆந்திரா: `திடீர் மயக்கம்; ஒருவர் பலி: 350 பேர் மருத்துவமனையில் அனுமதி!’- பதறவைத்த மர்ம நோய்