அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப்பெற்ற விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் பார்த்தீவ் படேல். தோனியின் வருகைக்கு முன்பு வரை பார்த்தீவ் படேல் அவ்வப்போது இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். தோனி வருகைக்கு பின்பு பார்த்தீவ் படேல் இந்திய அணிக்கு தேர்வாவது குறைந்தது. ஒருகட்டத்தில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. ஆனால், ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வந்தார் பார்த்தீவ் படேல். இந்நிலையில் அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பார்த்தீவ் படேல் அறிவித்தார். சிஎஸ்கே அணி 2010-ல் மற்றும் மும்பை அணி 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்கள் வென்றபோது அந்த அணிகளில் பார்த்தீவ் படேல் இடம்பெற்றிருந்தார். 2017-ல் மும்பை அணியில் அதிக ரன்கள் (395) எடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆறு அணிகளில் விளையாடியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தபோதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ஓய்வு பெற்றுள்ள பார்திவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது இணைந்துள்ளார். திறமைகளைக் கண்டறியும் குழுவில் ஒருவராக பார்த்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 11,240 ரன்கள் எடுத்துள்ள பார்த்தீவ் படேலுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் உண்டு. இதனால் திறமையான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RnRqrW
Friday, 11 December 2020
Home »
» பார்த்தீவ் படேலுக்கு மும்பை இந்தியன்ஸில் புதிய பொறுப்பு!