தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சகா குமாரி (51). இவர் காரக்கோணம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நல்ல வசதி இருந்தும் திருமணம் செய்யாமலே வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், தனது வயது முதிர்ந்த தாயை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். அந்த மருத்துவமனையில் நெய்யாற்றாங்கரை அருகே உள்ள பத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அருண் (26) என்பவர் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவந்த சகா குமாரிக்கு, அருண் உதவி செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சகா குமாரிக்கு பத்து ஏக்கர் நிலம் மற்றும் அழகு நிலையம் மூலம் அதிகப்படியான வருவாய் வருவது அருணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சகாவுடனான நட்பை மெல்லக் காதலாக மாற்றியுள்ளார் அருண்.திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
வயது முதிர்ந்த பெண் எனத் தெரிந்தும் சகாவைத் தீவிரமாக காதலித்ததுடன் இரண்டு மாதங்களுக்கு திருமணமும் செய்துகொண்டார். இவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து நடந்தது. வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு அருணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் திருமணத்துக்குச் செல்லவும் இல்லை. இதையடுத்து, திருமணம் செய்த கையோடு காரக்கோணத்தில் உள்ள சகா குமாரியின் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக ஒட்டிக்கொண்டார் அருண்.
சகாவின் வீட்டில் அவரது தாயார் உடல்நலக்குறைவால் படுக்கையில் உள்ளார். அவருக்கு உதவுவதற்காக ஹோம் நர்ஸ் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்கள் இவர்களது இல்வாழ்க்கை சுமுகமாகச் சென்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சகா, தனது திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், வாட்ஸ் அப் மூலம் அவரது தோழிகளுக்கும் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்த அருணின் நண்பர்கள் வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததாக கேலி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.கொலை செய்யப்பட்ட சகா குமாரி
புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது சம்பந்தமாக சகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அருண். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களின் கேலி மற்றும் வீட்டில் ஏற்பட்ட பிரச்னையாலும் நெந்துபோன அருண், தனது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கிறிஸ்துமஸ் குடிலுக்குப் பயன்படுத்திய சீரியல் மின் விளக்கு ஒயரில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படுத்தி வீட்டு வாசலில் போட்டுள்ளார்.
Also Read: குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!
சகா வீட்டில் இருந்து வெளியே வந்த சமயத்தில் அந்த ஒயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளார். அவர் இறக்கும்வரை காத்திருந்த அருண், மரணத்தை உறுதி செய்த பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் கூறியுள்ளார். மனைவி எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை என அருண் கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதியினர் வெள்ளறடை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.வயது முதிர்ந்த சகாவை திருமணம் செய்த அருண்
போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில், சகா இறந்து நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் போலீஸார் அருணைப் பிடித்து விசாரணை நடத்தினர். வயது முதிர்ந்த மனைவி சகாவைக் கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டுள்ளார். பணத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொலைசெய்த கேரள இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RpQt3x
Sunday, 27 December 2020
Home »
» கேரளா: பணத்துக்காக மூதாட்டியுடன் திருமணம்; நண்பர்கள் கேலி! - மனைவியைக் கொலைசெய்த இளைஞர்