கர்நாடக சட்டசபையில் ஆளும் பா.ஜ.க அரசு, பசுவதைத் தடை சட்டமசோதாவை நிறைவேற்றியது. இருந்தபோதும், கர்நாடக சட்ட மேலவையில் பா.ஜ.க-வுக்கு பலம் இல்லை என்பதால், சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. காரணம், சட்ட மேலவையின் அவைத் தலைவர் கே.பிரதாப் சந்திரஷெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 14 மாத காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கட்சி கூட்டணி ஆட்சியிலிருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல, துணைத் தலைவராக எஸ்.எல்.தர்மேகவுடா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
#WATCH Karnataka: Congress MLCs in Karnataka Assembly forcefully remove the chairman of the legislative council pic.twitter.com/XiefiNOgmq— ANI (@ANI) December 15, 2020
பசுவதை தடைச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மேலவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டுவரப் புகார் மனுவை பா.ஜ.க மேலவைச் செயலாளரிடம் வழங்கியது. சட்டமேலவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், அவை முடிவுகளில் அவர் தலையிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை முடிவுகளைத் துணைத் தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா மேற்கொள்ளவேண்டும் என்றும் பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது.
Also Read: கர்நாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட ஐபோன் தொழிற்சாலை! - 7,000 பேர் மீது வழக்கு
ஒத்திவைக்கப்பட்டிருந்த சட்ட மேலவை இன்று கூடியதும், துணைத் தலைவர், அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதற்கு காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரை இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறுமாறு கூறி அமளியில் ஈடுபட்டனர். அதன் பின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை, இருக்கையிலிருந்து இழுத்தனர். பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர்கள் அவரை இருக்கையில் அமரவைக்க முற்பட்டனர்.கர்நாடக மேல் சபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75. அதில், பா.ஜ.க-வில் 31 உறுப்பினர்களும், காங்கிரஸில் 29 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 14 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினரிடையே தள்ளுமுள்ளும் கைலகலப்பு ஏற்பட்டது. பின்னர் துணை சபாநாயகரை இருக்கையிலிருந்து இழுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியே தள்ளினர். இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RnhSWf
Tuesday, 15 December 2020
Home »
» `தள்ளிவிடப்பட்ட துணை சபாநாயகர்!’ - கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க - காங்கிரஸ் தள்ளுமுள்ளு