மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் நகரில் நடைபெற்ற 'கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ``வேளாண் சட்ட மசோதா ஒரு இரவில் கொண்டுவரப்பட்டது அல்ல, கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் நீண்டகால கோரிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்டது" என்றார்.
मध्य प्रदेश में किसान सम्मेलन को संबोधित करते हुए... https://t.co/Rli3e8o9xF— Narendra Modi (@narendramodi) December 18, 2020
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவின் விவசாயமும், விவசாயிகளும் இனியும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. உலகின் மற்ற பெரிய நாடுகளின் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். அதை, இனியும் தாமதப்படுத்தக்கூடாது. நான் அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களே அனைத்து புகழையும் வைத்துக்கொள்ளுங்கள். நான் விவசாயிகளின் வாழ்க்கையை எளிமையாக்க விரும்புகிறேன். அவர்களின் முன்னேற்றத்தை விரும்புகிறேன். விவசாயத்தில் நவீனத்துவத்தை விரும்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து, "கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் சட்ட திருத்தும் குறித்துப் பேசிவருகிறது. விவசாய வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் இந்த சீர்திருத்தங்களைக் கோரியிருந்தனர். இந்த உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது, போட்டிகளுக்குப் பின்னால் விவசாயிகள் விழுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். அரசியல் கட்சிகள் விவசாயிகளைத் தவறான வழியில் வழிநடத்துவதை நிறுத்தவேண்டும். வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டு 6 மதங்களுக்கும் மேல் ஆகிறது. சிலரின் அரசியல் ஆதாயத்திற்காகப் பொய்யான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.'கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
``விவசாயிகள் எவ்வளவு முயற்சி செய்தலும் சேமிப்பு சரியாக இல்லையென்றால், அது பெரும் இழப்பு தான். அந்த இழப்பானது விவசாயிகளுக்கு மட்டுமில்லை, இந்த ஒட்டுமொத்த தேசத்திற்குமானது. விவசாயத்துறையில் சேமிப்பு வசதி மற்றும் கிடங்குகள் மிகவும் முக்கியமானது. தற்போது, உணவு பதப்படுத்தும் மையங்கள், கிடங்குகள், குளிர் களஞ்சியங்கள், உலர் களஞ்சியங்கள் அமைப்பது முக்கியம். இவற்றை அமைப்பது குறித்துச் செயல்படத் தொடங்கவேண்டும்.
Also Read: டெல்லி: `மத்திய அரசு ஆராய வேண்டும்; போராட்டத்தால் பிரச்னைகள் தீராது!’ - உச்ச நீதிமன்றம் கருத்து
விவசாயிகளின் வளர்ச்சியை இந்த அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இந்த சட்டம் விவசாயிகளையும் வியாபாரிகளையும் இணைக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும். விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) நீக்க விரும்பினால், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும்? எம்.எஸ்.பி விவகாரத்தில் இந்த அரசு தீவிரமாக உள்ளது, அதனால் தான் அந்தந்த பருவத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிடுகிறோம். குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும்.
"The numbers I will provide you with, will clear everything up regarding the MSP," says PM Modi at the Kisan Kalyan event pic.twitter.com/cvnYtXuHq9— ANI (@ANI) December 18, 2020
தற்போது, அனைத்து விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை கிடைக்கிறது. முன்பு, இந்த அட்டை எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கப்படவில்லை. ஆனால், அந்த போக்கை மாற்றி நாட்டின் எல்லா விவசாயிகளுக்கும் இந்த கடன் அட்டை கிடைக்கும் வகையில் நாங்கள் விதிகளை மாற்றி அமைத்தோம். இந்த சட்டம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளன" என்று பேசினார் பிரதமர். இந்த நிகழ்ச்சியை மத்தியப் பிரதேசத்தில் உள்ள 23,000 கிராம மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RnvmdL
Friday, 18 December 2020
Home »
» வேளாண் சட்டங்கள்: `குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!’ - பிரதமர் மோடி உறுதி