ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் டிச. 25ம் தேதி ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவித்திருந்தது. அதற்கு பின்பு எடுத்த பரிசோதனைகளில் அவருக்கு கவலைப்படும்படியான பிரச்னைகள் எதுவும் இல்லையென்று மருத்துவமனை கூறியிருந்தது. இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காரில் இருந்துக்கொண்டு கையசைத்தபடி அவர் சென்றார். ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒருவாரம் ஓய்வெடுக்கவேண்டும் எனவும், ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், மன அழுத்தமின்றி இலகுவான பணிகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.
http://dlvr.it/RpSQQX
Monday, 28 December 2020
Home »
» மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்