உத்திர பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த ஒரு நாய்க்கு முறையான சடங்குகளோடு இறுதி மரியாதையை செய்து வழியனுப்பியிருக்கிறார்கள் 'PAC' காவல்படையினர். ராகேஷ் என்ற அந்த நாய், பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற்றதால் ஏற்கெனவே தேசிய பிரபலம்.மன் கி பாத்
பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்’ உரையில் பல மனிதர்கள் பற்றியும் பல நிகழ்வுகள் பற்றியும் பேசி வருகிறார். அப்படியொரு உரையில்தான் மோடி ‘ராகேஷ்’ என்ற நாயைப் பற்றியும் பேசினார்.
கொரோனா காலத்தில் நாம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். பிரச்னைகளிலிருந்து விலங்குகளும் தப்பவில்லை. நாய்கள் உட்பட பல விலங்குகள் கொரொனா காலத்தில் சரியான உணவு கிடைக்காமலும் தங்கள் எஜமானர்களைத் தொலைத்தும் தவித்திருக்கின்றன. ராகேஷும் அதில் ஒன்று. ராகேஷை, உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைட் சேர்ந்த ஒரு டீக்கடை உரிமையாளர் வளர்த்து வந்தார். லாக்டெளனில் அவரின் கடை மூடப்பட வேண்டியிருந்ததால், அவர் சொந்த ஊருக்கே திரும்பிட்டார். ஆனால், ராகேஷை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. எஜமானரும் இல்லாத சோகம், உணவும் சரிவர கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறது அந்த வாயில்லா ஜீவன்.
அதைப் பார்த்த பேக் (Provincial Armed Constabulary) உதவி ஆய்வாளர் உமேஷ் சின்ஹா, அந்த நாயை எடுத்து வளர்த்திருக்கிறார். அவரோடு அந்த சிறப்பு காவல் படையின் அனைத்து காவலர்களும் அந்த நாயின் மீது அன்பு செலுத்த துவங்கியிருக்கிறார்கள். அதன் பெயர் என்னவென தெரியாததால், புதுப்பெயர் வைக்க யோசித்து, அதன் உரிமையாளரான ராகேஷ் என்பவரது பெயரையே வைத்துவிட்டார்கள். ராகேஷும் உமேஷின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தது. ராகேஷுக்கும் உமேஷுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டது. அந்தத் தகவல் தெரிந்துதான் பிரதமர் மோடி மன் கி பாத் உரையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி PAC காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதேபோல எல்லோரையும் விலங்குகளுக்கு உதவுங்கள் எனவும் கேட்டிருந்தார்.நாய்க்கு இறுதி சடங்கு செய்த உபி சிறப்பு காவல்படை
இந்நிலையில் ஐந்து வயதான ராகேஷுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தொற்று ஏற்பட்டது. இந்த உடல்நலக் கோளாறுகளுக்கு முறையாக வைத்தியம் தரப்பட்டது. ஆனால், அவை உதவாமல் டிசம்பர் 2ம் தேதி ராகேஷ் உயிரிழந்தது. இதனால் கலங்கிய PAC காவல்படை, ஒரு மனிதனுக்கு செய்வது போலவே ராகேஷின் உடலுக்கு முழு மரியாதயுடன் இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/RmwGJX
Thursday, 3 December 2020
Home »
» மோடி குறிப்பிட்ட நாய்... முழு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்த காவல்படையினர்!