``கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LAC) குறித்த பிரச்னையில் சீனாவுடனான ராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள தீர்வு எதுவும் எட்டப்படவில்லை’’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி, நடந்த டபிள்யூ.எம்.சி.சி (WMCC) கூட்டத்தில், அரசியல்ரீதியாகவும், ராணுவரீதியாகவும் இருதரப்பும் நல்லுறவைப் பராமரிக்க ஒப்புக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இரு தரப்பினரும் தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப துருப்புக்களை வெளியேற்றி, அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியை நோக்கி செயல்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-க்குப் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா-சீன எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) கூட்டத்தை குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறுகையில், ``அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். எல்லையில் இதேநிலை தொடர்ந்தால், ராணுவப் படைகளை அங்கு நிறுத்துவதைக் குறைக்க முடியாது.
இந்திய ராணுவ வீரர்கள் நமது நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை மட்டும் அழிப்பதோடு மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் எல்லைத் தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பார்கள், அதற்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது.அருணாச்சலப்பிரதேச எல்லை
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக, ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்று வருவது உண்மைதான். ஆனால் இதுவரை அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த வெற்றியும் எட்டப்படவில்லை. ராணுவ மட்டத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். ஆனால், அர்த்தமுள்ள தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் நேர்மறையான விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
Also Read: India-China standoff: `சந்தேகம் வேண்டாம்... நமது எல்லைகளைப் பாதுகாப்பது உறுதி!’ - ராஜ்நாத் சிங்
மேலும், ``எல்லையில் சீனா பல்வேறு கட்டமைப்புப் பணிகளைச் செய்து வருகிறது. இந்தியாவும் அதுபோல பணிகளைச் செய்து வருகிறது. இதை தாக்குதல் நடத்துவதற்காக மேற்கொள்ளவில்லை. மாறாக இந்திய மக்களுக்காகவே செய்கிறோம். எல்லைப் பிரச்னைகள் குறித்து, இரு நாடுகளுக்கும் இடையில் ஹாட்லைனில் செய்தி பரிமாற்றம் நடைபெறுகிறது" என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் 35-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் அதுகுறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜ்நாத்,``போராடும் விவசாயிகள் நக்சல்கள், காலிஸ்தான்கள் என யாரும் குற்றம்சுமத்தக் கூடாது. விவசாயிகள் மீதான எங்களது மரியாதையை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் நமக்கு உணவு அளிப்பவர்கள். விவசாயிகள் விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறோமா என்ற கேள்விக்கே இடமில்லை. நமது விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் நான் மட்டும் வேதனைப்படவில்லை, பிரதமர் நரேந்திர மோடியும் வேதனையடைகிறார். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று அரசு திரும்பத் திரும்ப கூறிவருகிறது. ஜனநாயகத்தில், தலைவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அவர்களை தண்டிப்பார்கள்" என்று கூறினார்.
http://dlvr.it/RpcQkp
Wednesday, 30 December 2020
Home »
» `சீனாவுடனான பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள தீர்வு எதுவும் எட்டப்படவில்லை!’ - ராஜ்நாத் சிங்