உலகெங்கும் உருமாறிய கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசுகள் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசு சொல்லியுள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக காணும் பொங்கலுக்கு மெரினா கடர்கரையில் பொது மக்கள் கூட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வழிப்பாட்டு தளங்களில் வழக்கமான நேரங்களில் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். புதுச்சேரி, ஆதிரா, கர்நாடகா தவிர மற்ற பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவை தடுக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RpjPdL
Friday, 1 January 2021
Home »
» ‘மெரினாவில் காணும் பொங்கலுக்கு அனுமதி இல்லை’ - தமிழகத்தில் ஜன. 31 வரை ஊரங்கு நீட்டிப்பு