கேரள மாநிலம் இரிக்கூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக 39 ஆண்டுகளாக எம்.எல்.ஏ பதவியில் இருப்பவர் கே.சி ஜோசப். இவர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் அதிரடியாக அறிவித்து சீனியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்.
கோட்டயம் மாவட்டம் சங்ஙனாசேரியில் பிறந்த கே.சி. ஜோசப்பிற்கு இப்போது 74 வயது ஆகிறது. அவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரில்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 39 வருடங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் போட்டியிட்டு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு உம்மன் சாண்டிக்கு பொன்விழா கொண்டாடப்பட்டது. உம்மன் சாண்டி வரும் தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார்.காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசும் கே.சி.ஜோசப் எம்.எல்.ஏ
உம்மன் சாண்டிக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ச்சியாக அதிக ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கே.சி.ஜோசப். இளைஞர்களுக்கு வழிவிட்டு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதில்லை என அறிவித்திருக்கிறார் கே.சி.ஜோசப். இதுபற்றி கே.சி.ஜோசப் கூறும்போது, "1982-ம் ஆண்டு முதல் எட்டு தேர்தல்களில் நான் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். 39 ஆண்டுகள் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இனி வரப்போவது 9-வது பொதுத்தேர்தல். புதிய தலைமுறைக்கு வழிவிட்டு வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன்.
எனது முடிவை கட்சி தலைமைக்கும் அறிவித்துள்ளேன். காங்கிரஸ் போட்டியிடும் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியையும், இரிக்கூர் தொகுதியில் என்னையும் தொடர்ச்சியாக மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர். இதற்கு மக்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் காங்கிரஸ் கோட்டை எனக்கூறும் திருவாம்பாடி, சுல்த்தான் பத்தேரி போன்ற பிற சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் இடையில் தோல்வியடைந்தது, பின்னர் மறுபடியும் வெற்றிபெற்றது. இங்கு எட்டு தேர்தல்களிலும் தோல்வி இல்லாமல் வெற்றிபெற்றதற்கு மக்கள் காங்கிரஸ் மீதும் யு.டி.எஃப் கூட்டணி மீதும் கொண்ட நம்பிக்கைதான் காரணம்.உம்மன் சாண்டியுடன் டீ குடிக்கும் கே.சி.ஜோசப் எம்.எல்.ஏ
இரண்டு தேர்தல்களில் என்னை எதிர்த்து சி.பி.எம் வேட்பாளர் போட்டியிட்டனர். அதில் ஒருமுறை சுமார் 1,800 வாக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். கடந்த தேர்தலில் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். எனக்கும் என் தொகுதி மக்களுக்கும் நல்ல தொடர்பு இருந்தது. நான் முதலில் வெற்றிபெறும்போது இந்த தொகுதியை பற்றி முழுமையாக தெரியவில்லை. ஆனால் இன்று இந்த தொகுதியின் ஒவ்வொரு பகுதிகளும் எனக்கு அத்துப்படி. நான் ஆத்மார்த்தமாக மக்கள் பணி செய்ததன் பிரதிபலனாகத்தான் மக்கள் என்னிடம் நன்றியுடனும், பாசத்துடனும் இருக்கிறார்கள். கடந்த முறை என்னை தோற்கடிக்க ஒரு கூட்டமே தீவிரமாக வேலை செய்தது. சமூக வலைத்தளங்களில் தனித்தனி குழுக்களை ஏற்படுத்தி எனக்கு எதிராக பிரசாரம் நடந்தது. ஆனால் மக்களிடம் அது எடுபடவில்லை. அதற்காக இரிக்கூர் தொகுதி மக்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்றார்.
http://dlvr.it/Rrbfz7
Friday, 29 January 2021
Home »
» கேரளா: `இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!' - 39 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்த கே.சி.ஜோசப்