கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி இரவு சுமார் 10.20 அளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. குண்டுவெடிப்பின் அதிர்வானது பூகம்பம் போல் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிர்வானது அருகில் உள்ள மாவட்டங்களான சிக்மங்களூர், தேவனகிரி மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதலைச்சரின் சொந்த ஊரான சிவமோகாவில் அவரது வீட்டிலும் இந்த சத்தம் உணரப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸாரின் முதல்கட்ட விசாரணையில், கல்குவாரிக்கு கொண்டு சென்ற டைனமைட் வழியிலேயே வெடித்துச் சிதறியது தெரியவந்துள்ளது. இதில் வண்டியில் பயணம் செய்த 6 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
This had never happened before in Shivamogga. We are witnessing this for the first time here. Experts are coming from Bengaluru, they will give a report after which we will take action: KS Eshwarappa, Karnataka Minister on an explosion in #Shivamogga pic.twitter.com/cUYaD2o7N7— ANI (@ANI) January 22, 2021
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள கட்டடங்கள், ஜன்னல் கதவுகள் போன்றவை கடுமையாகச் சேதமடைந்தன. பல வீடுகள், சாலைகளில்கூட குண்டு வெடிப்பின் காரணமாக விரிசல்கள் உருவாகியுள்ளன.
குண்டுவெடிப்பை பூகம்பம் என்று நினைத்த மக்கள் உடனடியாக புவியியலாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் எந்தவொரு கண்காணிப்பகத்திலும் நிலநடுக்கம் பதிவாகவில்லை என்று விளக்கமளித்தனர்.
Also Read: நெல்லையில் பிடிபட்ட கர்நாடகா கொள்ளையர்கள்! - அட்ரஸ் கேட்பதுபோல வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம்
இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், `சிவமோகாவில் நிகழ்ந்த சம்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்' என்று பதிவிட்டுள்ளார்.சிவமோகா குண்டுவெடிப்பு
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கூறுகையில், ``இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
"ஒரு பெரிய அளவிலான டைனமைட் வெடித்தது போல் தெரிகிறது மற்றும் குவாரி உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர்களால் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்திருக்கிறது. குவாரி உரிமையாளர் மற்றும் டைனமைட் சப்ளையரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது ”என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
http://dlvr.it/Rr9wTS
Saturday, 23 January 2021
Home »
» கர்நாடகா: சிவமோகாவை அதிரவைத்த கல்குவாரி வெடிவிபத்து; 6 பேர் பலி! இருவரைக் கைது செய்த போலீஸ்