குழந்தை பேறு இல்லா தம்பதிகள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது வழக்கம். முறைப்படி குழந்தைகளை தத்து எடுக்கவேண்டுமானால் அதற்கு அதிகப்படியான நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. இதனால் சிலர் குழந்தைகளை சட்டவிரோதாக தத்து எடுத்து விடுகின்றனர். இதற்காகவே சில ஏஜெண்டுகளும் வேலை செய்து வருகின்றனர். குழந்தை
பொருளாதார ரீதியாக பிந்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை தத்து கொடுத்துவிடலாம் என்றும் இதன் மூலம் பணமும் கிடைக்கும் என்று குழந்தையின் தாயிடம் பேசி சம்மதிக்க வைத்துவிடுகின்றனர். இதற்காக மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்கள் ஏஜெண்டுகளாக பணியாற்றுகின்றனர்.
சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை ஒன்று விற்பனை செய்யப்படுதாக சப் இன்ஸ்பெக்டர் யோகேஷ் சவானுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரும் மணீஷா பவாரும் இது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் குழந்தையை விற்பனை செய்த பெண் ருக்ஷர் ஷேக் என்று தெரிய வந்தது. இந்த பெண் தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளை சட்டவிரோதமாக ரூபாலி வர்மா என்ற பெண் மூலம் ஒரு பெண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாயிக்கும், ஆண்குழந்தையை 1.50 லட்சத்திற்கும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஷேக், ஜோகில்கர், ரூபாலி வர்மா ஆகிய மூன்று பேரும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் ஜோகில்கர் தனது ஒரு குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு புனே தம்பதிக்கும், மற்றொரு ஆண் குழந்தையை தாராவியில் உள்ள தம்பதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்திருந்தார். உடனே குழந்தையின் தாயை அழைத்துக்கொண்டு தாராவிக்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய ஆர்த்தி சிங், நிஷாஅஹிரே, ஹீனாகான், ஜீதாஞ்சலி கெய்க்வாட், சஞ்சம் பதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆர்த்தி லேப் டெக்னீசியனாக பணியாற்றுகிறார். ரூபாலி வர்மா, ஹீனா கான், நிஷா ஆகியோர் ஏஜெண்டாக பணியாற்றியுள்ளதோடு வாடகைத்தாய் மையத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். வாடகைத்தாய் கேட்டு வரும் தம்பதிகளை குறிவைத்து இவர்கள் தங்களது வேலையை காட்டியுள்ளனர்..மருத்துவமனையில் குழந்தைகள்
இக்கும்பல் 7 குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் 6 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீசார் இதற்காக கைது செய்யப்பட்டவர்களின் போனை பறிமுதல் செய்து அவர்களின் வாட்ஸ்அப் பதிவுகளையும், போன் கால் விபரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இம்மோசடியில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒர்லியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் தனஞ்சே என்பவரும் குழந்தை விற்பனை தொடர்பாக பிடிபட்டுள்ளார். இவர் குழந்தை விற்பனைக்காக கமிஷனாக 30 ஆயிரம் பெற்றுள்ளார். மொத்தம் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் 7 பேர் பெண்கள் ஆவர். மும்பையில் கடந்த மூன்று ஆண்டில் இது போன்று சட்டவிரோத குழந்தை விற்பனை பிடிபடுவது 3வது முறையாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
http://dlvr.it/RqthqW
Tuesday, 19 January 2021
Home »
» மும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை! - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது