கொரோனா தடுப்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி புனேயிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. வரும் 16-ம் தேதியிலிருந்து இந்தத் தடுப்பூசி போடப்படவிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு மொத்தம் 9,63,000 டோஸ் வழக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ராஜேஷ் தோபே
இதில் மும்பைக்கு 1,39,500 டோஸ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவை நேற்று அதிகாலை சிறப்பு வாகனத்தில் புனேயிலிருந்து வந்து சேர்ந்தன. பரேலிலுள்ள எப்-தெற்கு வார்டு அலுவலகக் கட்டடத்தில் அவை சேமிக்கப்பட்டிருக்கின்றன. காஞ்சூர்மார்க்கிலும் தடுப்பூசியைச் சேமித்துவைக்க பிரத்தியேகக் குளிர்சாதன வசதிகொண்ட சேமிப்புக் கிடங்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 1.2 கோடி டோஸ் சேமித்துவைக்க முடியும். அடுத்த இரண்டு நாள்களில் தடுப்பூசி மும்பையிலுள்ள 72 மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். மும்பை தவிர தானே, புனே, கோலாப்பூர், நாசிக், அகோலா, நாக்பூர் உட்பட முக்கிய நகரங்களுக்கும் நேற்று இரவே தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இரண்டுகட்டமாக இந்தத் தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போட்டதிலிருந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போடப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் முதற்கட்டமாகப் போடப்படும். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், ``தடுப்பூசி 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கும் போடப்படாது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முதற்கட்டமாக தடுப்பூசி போடத் திட்டமிட்டிருக்கிறோம். மகாராஷ்டிராவில் மொத்தம் 511 இடங்களில் தடுப்பூசி போடப்படவிருக்கிறது. மும்பையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இதுவரை 1.3 லட்சம் பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார். கோவிஷீல்டு தடுப்பூசி
தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு அல்லது புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் கொண்டு வர வேண்டும். முன்னதாக CoWIN மொபைல் ஆப்பிலும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைத் தாண்டியிருக்கிறது. இதில் மும்பையில் மட்டும் 11,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு, மூன்று லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
http://dlvr.it/RqVQfG
Wednesday, 13 January 2021
Home »
» சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி கிடையாது! - மகாராஷ்டிரா அரசு முடிவு