டெல்லியை மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் உலுக்கியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்திருக்கிறது. சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்கும் வண்ணம் டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இருந்தபோதினும் முன்னேறி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, கோட்டையின் வாசலில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத்( 45வயது) உயிரிழந்தார். இதற்கிடையே வன்முறையை தடுக்க தவறியதற்கு 3 காரணங்கள் உள்ளன என்று அடுக்கின்றனர் டெல்லி காவல்துறையினர். மாற்றுப்பாதை சோகம்! குடியரசு தினம் என்பதால் நேற்று டெல்லியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் டெல்லியின் செங்கோட்டையில் கொடியேற்றத்தை முன்னிட்டு டெல்லி காவல்துறையைத் தவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 50 நிறுவனங்களும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 28 நிறுவனங்களும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் 17 நிறுவனங்களும் தலைநகர் முழுவதும், எல்லைகள் உட்பட பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 75 வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதற்கிடையே, முன்னதாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தோடு அதற்கான அனுமதி வாங்கும்போது டெல்லி காவல்துறை எந்த இடம் வரை அனுமதிக்கிறதோ, அந்த இடத்தில் பேரணியை முடித்துக்கொள்வோம் என்றும், காவல்துறை அனுமதி தராதவரை டெல்லி நகருக்குள் நுழைய மாட்டோம் என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் போலீஸிடம் வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால், விவசாயிகள் வாக்குறுதி கொடுத்தது =போல நடந்துகொள்ளவில்லை என்கிறது டெல்லி போலீஸ் தரப்பு. டெல்லி காவல்துறை நேற்று ஒப்புதல் அளித்த பாதையில் இருந்து எதிர்ப்பாளர்கள் விலகி மாற்றுப்பாதையில் புகுந்தனர். டிராக்டர்களிலும் குதிரைகளிலும் டெல்லி நகருக்குள் நுழைந்த அவர்கள், செங்கோட்டையில் ஏறி கொடியேற்றினர். மேலும், அனுமதி அளித்த பகுதியைத் தாண்டி டிராக்டர்களில் விவசாயிகள் பலர் நகருக்குள் நுழைந்ததால், இருதரப்பும் மோதல் ஏற்பட்டது. அமைதியான வழியில், டிராக்டர் பேரணி நடக்கும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் வாக்குறுதி கொடுத்ததுக்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் அத்துமீறி நடந்துகொண்டனர் என்கிறது டெல்லி போலீஸ் தரப்பு. `நியமிக்கப்பட்ட அந்த மூன்று வழித்தடங்களில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் 40 கி.மீ தூரத்தில் பரவியிருந்தனர். ஆனால் விவசாயிகள் அங்கு ஒருபோதும் சென்றடையவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் மத்திய டெல்லிக்குச் சென்றனர் - இது முற்றிலும் மாறுபட்ட இடம், ஆளில்லாது - இது ஒரு பெரிய சவாலாக மாறியது. விவசாய தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாதையில் அணிவகுப்புக்கு வசதியாக எங்கள் பெரும்பான்மையான காவலர்களை பணியில் அமர்த்தியிருந்தோம். ஆனால், அவர்கள் வழியிலிருந்து விலகி மத்திய டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் எங்களை விட அதிகமாக இருந்தனர். அதுவும் டிராக்டர்களில் லட்ச கணக்கில் இருந்தபோது, நாங்கள் ஆயிரக்கணக்கில் மட்டுமே இருந்தோம். எனினும் உயிர் இழப்பு அல்லது கடுமையான காயங்கள் இல்லாமல் நிலைமையை நிர்வகித்தோம்" என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் இருவர் பேசியுள்ளனர். ‘உளவுத்துறை தோல்வி’ விவசாய பிரதிநிதிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் டிராக்டர் பேரணிக்கான வழிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், காலை 11.30 மணிக்கு பேரணியைத் தொடங்குமாறு விவசாயிகளுக்கு, காவல்துறை வட்டாரங்கள் உத்தரவிட்டுள்ளது. ஆனால், காலை 8.30 மணியளவில், திக்ரி எல்லையில் முதல் தடுப்புகளை உடைத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பேரணியைத் தொடங்க வேண்டும் விவசாயிகள் கோரியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் பாதைகளில் இருந்து விலக முயற்சிக்க முடியும் என்று அப்போது கூட எதிர்பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க பேரணியைப் பயன்படுத்த சில கூறுகள் சாத்தியம் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதை டெல்லி காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் நிலைமையைச் சமாளிக்க முன் ஏற்பாடுகளைச் செய்ய டெல்லி காவல்துறை தவறிவிட்டது என்றும் இந்த தகவலை அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், "மற்றவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது" என்றும் கூறி இருக்கின்றனர். மேலும், 50 உழவர் அமைப்புகள் 90 சதவீதம் பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் கருத்து வேறுபாட்டில் இருந்தனர். இந்த 10 சதவிகிதம்தான் சிக்கலை உருவாக்கியது மற்றும் மற்றவர்களைப் பின்பற்ற ஊக்குவித்தது. இவர்களே பேரணியை திசை மாற்றியது. ஆனால் இந்த தகவலை உளவுத்துறை சொல்லமறுத்துவிட்டதாக கூறுகிறார்கள் டெல்லி காவல்துறையினர். மேலும், விவசாயிகள் பெரும்பாலானோர் தங்களின் சங்கத் தலைவர்களை உதறிவிட்டு தனியாக களத்தில் புகுந்தனர். இதுவும் சிக்கலுக்கு வழிவகுத்தது. ஆனால் இதுதொடர்பாக உளவுத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் முன்னேற்பாடுகள் செய்ய முடியவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர் டெல்லி காவலர்கள். ‘படைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவு!’ காவல்துறையினரின் கூற்றுப்படி, நிலைமை கைவிடப்படுவதற்கு மற்றொரு காரணம் விவசாயிகளிடம் அவர்கள் கொண்டிருந்த “மென்மையான அணுகுமுறை”. போராட்டக்காரர்களை அடக்க படைகள், எதுவும் பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. ``விவசாயிகள் மீது அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், எதிர்ப்பாளர்களுடன் மென்மையாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன. இதனால்தான் காவலர்கள் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு மட்டும் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அதுவும், அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைந்த பின்னரும், அவர்களில் பலர் எல்லைகளில் நுழைந்தபின்பே லத்தி சார்ஜ் தீவிரமாகத் தொடரப்பட்டது. வன்முறையை நாடக்கூடாது, எல்லைகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று விவசாயிகளிடம் முறையீடுகள் செய்யப்பட்டது" என்று தி பிரிண்ட்டிடம் டெல்லி காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். - தகவல் உறுதுணை: The Print
http://dlvr.it/RrXyyG
Friday, 29 January 2021
Home »
» டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!