எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இடதுசாரி சிந்தனையாளரான இளவேனில், 'வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்', 'புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களையும், கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தில், இளவேனில் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இளவேனில் மறைவு இலக்கிய உலகத்திற்கும் திரையுலக்கிற்கும் பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்
http://dlvr.it/RppSMF
Sunday, 3 January 2021
Home »
» எழுத்தாளர் இளவேனில் மறைவு: இன்று மாலை இறுதிச் சடங்கு