நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார். ஈரோடு அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “ நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன், நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாச்சாரத்தை மதிக்கவில்லை. இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தமிழில் பேசி ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது” என தெரிவித்திருக்கிறார். முன்னதாக மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பரப்புரையின் தமிழ், தமிழர் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
http://dlvr.it/RrDnKV
Sunday, 24 January 2021
Home »
» “நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!