கொரோனா வேகமாகப் பரவிய ஊரடங்குக் காலத்தில் தினமும் மாலை 6 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவது வழக்கம். என்றாவது நேரடியாக மீடியா பேட்டி அளிக்க வாய்ப்பு இல்லாமல் போனால், ஆன்லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தால், அன்றைய கொரொனா பரவல் குறித்து பிரஸ் ரிலீஸ் மட்டும் வெளியாகும்.
பினராயி விஜயனின் பேட்டியை கேரளத்தின் அனைத்து மீடியாவும் லைவ் செய்வது வழக்கம். தினமும் மாலை 6 மணியானால், பினராயி விஜயனின் செய்தியாளர் சந்திப்பை பார்ப்பதற்கென்றே டி.வி-யை ஆன் செய்பவர்கள் பலர் உண்டு. அதில், கொல்லம் மாவட்டம் டீசெண்ட் முக்கு பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் - டாக்டர் சுபி தம்பதியின் மூன்று வயது மகள் அவந்திகாவும் ஒருவர். தாயுடன் அவந்திகா
மாலை 6-மணி பிரஸ் மீட்டுக்காக பினராயி விஜயன் வந்ததும், 'அப்பூப்பன்(தாத்தா) வந்துவிட்டார்' எனக் குஷி ஆகிவிடுவாராம் அவந்திகா. ஒருநாள் பினராயி விஜயன் டி.வி-யில் பிரஸ் மீட்டுக்காக வராமல் இருந்தாலும் அவந்திகா 'அப்பூப்பாவை காணணும்' என அடம்பிடிப்பாராம்.
லாக்டெளன் நேரத்தில் முதல்வர் பினராயி விஜயனை டி.வி-யில் பார்த்து தாத்தா என அழைத்து மனதில் இருத்திக்கொண்டார் அவந்திகா. ஒருகட்டத்தில் கொரோனா பரவல் குறைந்த பின்னர் முதல்வரின் தினசரி பிரஸ் மீட்களும் குறைய, பினராயி விஜயனை டி.வி-யில் பார்க்க முடியாமல் இருந்ததால் அவந்திகா அழுது ஊரைக் கூட்டியிருக்கிறாள். இதனால் அவளின் பெற்றோர் தலைமைச் செயலகத்துக்கு போன் செய்து விபரத்தைக் கூறி அவந்திகாவிடம் கொடுத்திருக்கிறார்கள்.
தொலைபேசியின் எதிர்முனையில், தலைமைச் செயலகத்திலிருந்து பேசிய பெண் ஊழியரிடம் அவந்திகா, 'பினராயி அப்பூப்பா எப்படி இருக்கிறார்' என நலம் விசாரித்திருக்கிறார். அவர்களும் நன்றாக இருப்பதாக பதில் கூறி சிறிது நேரம் கனிவுடன் பேசியிருக்கிறார். இதனால் அவந்திகா சற்று ஆறுதலாகியிருக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக கொல்லம் அரசு விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் பினராயி விஜயன் வர உள்ளதாக அவந்திகாவின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.பினராயி விஜயனை சந்திக்க கொல்லம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்ற அவந்திகா
இதையடுத்து கொல்லம் மாவட்ட சி.பி.எம் அலுவலகத்துக்குச் சென்ற அவந்திகாவின் பெற்றோர், பினராயி விஜயன் மீதான தங்கள் மகளின் பாசத்தை கூறி, அவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். கொல்லம் மாவட்ட கமிட்டியும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதையடுத்து கொல்லம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பினராயி விஜயனை சந்திக்க சிவப்பு நிற உடையுடன், சிவப்பு மாஸ்க், தலையில் சிவப்பு ரீத், பினராயி விஜயனுக்கு அணிவிக்க சிவப்பு ரிப்பன், அவருக்கு வழங்க கையில் சிவப்பு ரோஜா சகிதமாக 'குட்டி சகாவு' ரேஞ்சுக்கு வந்திருந்தார் அவந்திகா.
அவந்திகாவை அவரின் அம்மா டாக்டர் சுபியும், பாட்டி சூர்யாவும் அழைத்து வந்திருந்தனர். அவந்திகாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் அவள் ஷோபாவில் அமர்ந்திருந்த பினராயி விஜயனுக்கு பக்கத்தில் போய் அமர்ந்தாள். கையில் வைத்திருந்த சிவப்பு ரோஜாப் பூவையும், ரிப்பனையும் பினராயி விஜயனுக்குக் கொடுத்தார். ரோஜா பூவை வாங்கிய பினராயி விஜயன், "மோளா இந்த ரோஜாப்பூவை வாங்கின..." எனப் பாசமாகக் கேட்டவர், 'என்ன படிக்கிறாய்...' என்பதுபோன்ற கேள்விகளை கேட்டார். பிளே ஸ்கூலுக்கு போவதாகக் கூறிய அவந்திகா 'அப்பூப்பா' என அழைத்தபடி பினராயி விஜயனை தனது மழலைக்குரலால் வசப்படுத்தினார்.பினராயி விஜயனுடன் உரையாடும் அவந்திகா
இதையடுத்து அவந்திகா கொண்டு சென்ற சிவப்பு ரிப்பனை அவளுக்கே அணிவித்து வழியனுப்பி வைத்தார் பினராயி விஜயன். பினராயி விஜயனை சந்தித்த அவந்திகா, "அப்பூப்பனை கண்டு..!" என வெளியில் நின்றவர்களிடம் உற்சாகமாகக் கூறினாள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்று வயது சிறுமியிடம் பேத்திபோல கொஞ்சிப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
http://dlvr.it/Rpy9nc
Tuesday, 5 January 2021
Home »
» `அப்பூப்பனை கண்டு..!' - பினராயி விஜயன் கொஞ்சிய குழந்தை... இது கேரள `வைரல்'