மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் பேச அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எழுந்தபோது "ஜெய் ஸ்ரீராம்" என கேஷம் எழுப்பப்பட்டதால் அவர் பேச மறுத்துவிட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்ததினமான இன்று கொல்கத்தாவின் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசுவதற்கு மம்தா எழுந்தபோது கூட்டத்தில் சிலர் "ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பேச மறுப்பு தெரிவித்தார்.
Responding to some members raising slogans of #JaiShriRam in the audience, CM #MamataBanerjee says its not a political programme, and noone should be insulted after being invited #NetajiSubhasChandraBose#ModiVsMamata#BreakingNewspic.twitter.com/VBBE4v8ZEU— Global.TV (@GlobalTelevsion) January 23, 2021 இது குறித்து பேசிய மம்தா "இது அரசியல் நிகழ்ச்சியல்ல, அரசு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியம் தேவை. நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவரை அவமதிப்பது சரியல்ல" என தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/RrBp1r
Sunday, 24 January 2021
Home »
» பிரதமர் நிகழ்ச்சியில் பேச எழுந்த போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம்- கோபத்தில் பேச மறுத்த மம்தா