சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கும் சூழலில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன்,``சின்னம்மா அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.மருத்துவமனை முன் கூடியிருந்த அ.ம.மு.க-வினர்
இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களைச் சந்தித்து, எப்போது அழைத்துச் செல்லலாம் என்று ஆலோசிக்கவிருக்கிறோம். ஓய்வு தேவைப்படும்பட்சத்தில், பெங்களூருவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்வது பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னரே சொல்ல முடியும்.
Also Read: சசிகலா: முடிவுக்கு வந்தது 4 ஆண்டுகள் சிறை தண்டனை! - மருத்துவமனையில் இருந்து நேரடி விடுதலை
சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது, சசிகலாவின் விடுதலையை அ.தி.மு.க-வினர் சென்னையிலிருந்தபடியே கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்றவரிடம்...சசிகலா
``அ.தி.மு.க - அ.ம.மு.க இணையுமா... அ.தி.மு.க-வுக்கு சசிகலா தலைமை ஏற்பாரா, இல்லையா என்று நீங்கள் இந்த நேரத்தில் நேரடியாக பதில் சொல்லுங்கள்?’’ என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த தினகரன், ``இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சித்தி விடுதலையான மகிழ்ச்சியில் இருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுத்து அம்மாவின் உண்மையான ஆட்சியைக் கொடுக்கத்தான்’’ என்றார்.
http://dlvr.it/RrR8kq
Wednesday, 27 January 2021
Home »
» `அ.தி.மு.க-வை மீட்பதே எங்களின் நோக்கம்!’ -டி.டி.வி.தினகரன்