கர்நாடக சட்ட மேலவை கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. அந்த அவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் கலந்துகொண்டார். அவையில் பரபரப்பான விவாதம் நடைபெற்ற வேலையில் பிரகாஷ் ரத்தோட் தனது மொபைல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவர், தனது மொபைல்போனில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் பார்த்ததாக வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வீடியோ பார்க்கும் பிரகாஷ் ரத்தோட்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விளக்கமளித்த பிரகாஷ் ரத்தோட், ``நான் எந்த ஆபாசப்படமும் பார்க்கவில்லை. எனது மொபைல்போனில் மெமரி நிரம்பியிருந்ததால், சிலவற்றை அழித்துக்கொண்டிருந்தேன். எனக்கு யாரும் ஆபாசப்படம் அனுப்பவில்லை. நான் ஆபாசப்படம் பார்க்கவும் மாட்டேன். அவையில் நான் கேட்ட கேள்விக்கு என் மொபைலுக்கு பதில் அனுப்பியிருந்தனர். அதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" என்று கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இது போன்ற குற்றச்சாட்டு வருவது இது முதன்முறை கிடையாது. முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் சி.சி.பாட்டீல், லஷ்மண் சவதி ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். இருவரும் சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததாக வீடியோ வெளியானதை அடுத்து கர்நாடகாவில் இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் பதவி விலக நேர்ந்தது. தற்போது எடியூரப்பாவின் அமைச்சரவையில் லஷ்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பாட்டீல் அமைச்சராகவும் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.பிரகாஷ் ரத்தோட்
இந்தச் சம்பவத்தை அடுத்து, கர்நாடக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர், பத்திரிகையாளர்கள் என்று யாருக்கும் மொபைல்போனை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சட்டப் பேரவையில் செல்போன் பயன்படுத்தத் தடை இருக்கும்போது பிரகாஷ் ரத்தோட் எப்படித் தனது செல்போனை எடுத்துச் சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரகாஷ் ரத்தோட் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் கொடுத்திருந்த நிலையிலும், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.
http://dlvr.it/Rrg1dr
Saturday, 30 January 2021
Home »
» கர்நாடகா: `மேலவைக் கூட்டத்தொடரில் ஆபாசப்படம் பார்த்தேனா?’ - மறுக்கும் காங்கிரஸ் உறுப்பினர்