பறவைக்காய்ச்சல் மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பரவியுள்ளது. இதனால் கோழிக்கறி மற்றும் முட்டை விலை வெகுவாக சரிந்துள்ளது. நந்துர்பார் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சுற்றி 26 கோழிப்பண்ணைகள் இருக்கிறது. இந்த பண்ணையில் உள்ள கோழிகளை அழிக்கும் பணி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மாவட்ட நிர்வாகம் 32 ஆயிரம் கோழிகளை அழித்தது. இரண்டாவது நாளான நேற்று 1.05 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டது. இப்பணிகள் மேலும் சில நாட்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இப்பகுதியில் 5 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் இறந்தது. பறவைக் காய்ச்சல்
அதில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எனவே அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் கோழிகளை அழிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்காக 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இடம் பெற்று இருப்பர். இது குறித்து நந்துர்பர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரா கூறுகையில், ``பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 4 பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் 22 கோழிப்பண்ணைகளில் கோழிகளின் இறப்பு அதிகமாக இருக்கிறது. அதன் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தவுடன் அதில் உள்ள கோழிகளும் உடனே அழிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு பிரபலமாக இருப்பது போல் மகாராஷ்டிராவில் நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள நந்துர்பர் தாலுகாவில் அதிகப்படியான கோழிப்பண்ணைகள் இருக்கிறது. இக்கோழிப்பண்ணையில் இருந்து அண்டை மாவட்டங்கள் மற்றும் குஜராத்துக்கு கோழி மற்றும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இறந்த கோழிகள் சோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது
2006ம் ஆண்டு பறவைக்காய்ச்சல் பரவுவதற்கு நந்துர்பர் மாவட்டம் தான் முக்கிய காரணமாக இருந்தது. அது போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் முழுவேகத்தில் செயல்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் ஏற்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட 44 ஆயிரம் முட்டைகளும் அழிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு 34 லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RsJy9C
Tuesday, 9 February 2021
Home »
» மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல்: 100 குழுக்கள் அமைப்பு... 9 லட்சம் கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்!