சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டக் அவுட்டானார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் போட்டியில் 11 ஆவது முறையாக கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார். ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் புஜாரா அவுட்டான பின்பு களமிறங்கிய கோலி பெரிய அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11 ஆவது முறையாக கோலி டக் அவுட்டானார். அதுவும் முதல்முறையாக ஒரு சுழற்பந்துவீச்சாளரிடம் கோலி டக் அவுட்டானார். இதுவரை கோலியை வெஸ் இண்டீஸின் ரவி ராம்பால், பென் ஹில்பென்ஹாஸ், லியாம் பிளங்கட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சல் ஸ்டார்க், சுரங்கா லக்மல், ஸ்டூவர்ட் பிராட், பாட் கம்மின்ஸ், கேமார் ரோச், அபே ஜாவேத் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் டக் அவுட்டாக்கியுள்ளனர்.
http://dlvr.it/RsdMYt
Saturday, 13 February 2021
Home »
» டெஸ்ட்டில் 11 ஆவது முறையாக விராட் கோலி 'டக் அவுட்'!