வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கூறியுள்ள விவசாய அமைப்புகள், அக்டோபர் 2-ம் தேதி வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் சக்கா ஜாம் எனப்படும் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அதேநேரத்தில் ஏற்கெனவே அறிவித்தப்படி டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் போராட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளின் போராட்டத்தையொட்டி டெல்லி எல்லையான சிங்கு, காஜிபூர், டிக்ரி பகுதிகலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இணையசேவையும் முடக்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்புகள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றனர். வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைப்பதை ஏற்க முடியாது என்ற விவசாயிகள், நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். தங்களது கோரிக்கையில் சமரசம் செய்ய முடியாது என்ற விவசாய சங்கத் தலைவர் ராகேஷ், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி வரை தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
http://dlvr.it/RsB6l4
Sunday, 7 February 2021
Home »
» 'அக்டோபர் 2-ம் தேதி வரை போராட்டம் தொடரும்” - விவசாய அமைப்புகள் அறிவிப்பு