தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. கேரளாவின் வனப்பகுதிக்குள் அணை அமைந்திருந்தாலும், அதைப் பராமரிப்பது முதல் அனைத்து விவகாரங்களையும் தமிழக பொதுப்பணித்துறைதான் கவனித்து வருகிறது. கடந்த 2000-மாவது ஆண்டு முதல், இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு பகுதியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், ஜூன் 19, 2000-ம் ஆண்டு, அணைக்குச் செல்லும் மின் கம்பியில் உரசி, காட்டு யானை ஒன்று பரிதாபமாகப் பலியானது. அதையடுத்து, அணைக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தியது கேரள மின்சாரத்துறை. வனப்பகுதியில் மின் கம்பிகள் செல்ல தடை விதித்தது கேரள வனத்துறை. மின்சார இணைப்பு கொடுக்கும் நிகழ்வில் கேரள அமைச்சர்.
Also Read: முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை பராமரிப்பு என்ன ஆனது? - சந்தேகம் எழுப்பும் விவசாயிகள்
மீண்டும் அணைக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும் எனப் பல முறை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை கேரள மின்சாரத்துறை பரிசீலித்தாலும், கேரள வனத்துறை அனுமதி கொடுக்க மறுத்துவந்தது. அணையின் பராமரிப்புப் பணியில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும், கடந்த 20 ஆண்டுகளாக, மின்சாரம் இன்றி, வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள அணைப்பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில், கேரள வனத்துறை, வன விலங்குகளுக்கு இடையூறு இன்றி, மின்சார கம்பிகளை நிலத்தில் புதைத்து கொண்டு செல்ல இசைவு தெரிவித்தது. அதையடுத்து கடந்த சில மாதங்கள் முன்னர், நிலத்தில் மின் கம்பிகள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்டு, இன்று முல்லைப்பெரியாறு அணைக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மின்சார இணைப்பு கொடுக்கும் நிகழ்வில் கேரள அமைச்சர்.
Also Read: `முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு விதிகள் பழைமையானவை!’ - உச்ச நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு
இது தொடர்பாகத் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில், ``மின் இணைப்பு வழங்கு வதற்காக, தமிழக அரசு, கேரள மின்சாரத்துறைக்கு 2005, 2007, 2016 ஆகிய ஆண்டுகள் முறையே மொத்தம் 1.65 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. 5.5 கிலோமீட்டர் தூரத்துக்கு வன நிலத்தின் வழியே மின் கம்பிகள் கொண்டு செல்ல, கேரள வனத்துறைக்கு 13,47,035 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, வன விலங்குகளுக்கு பாதுகாப்பான முறையில், கேரள வனத்துறை அனுமதி பெற்று மின்சாரம் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதற்கென அணைப் பகுதியில் டிரான்ஸ்பார்மர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை
Also Read: பெருமைமிகு முல்லைப்பெரியாறு அணை - 125 வது ஆண்டு சிறப்புப் பகிர்வு
மின் இணைப்பு வழங்கும் நிகழ்வில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, பீர்மேடு எம்.எல்.ஏ பிஜிமோள், இடுக்கி எம்.பி டீன் குரியாகோஸ், தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள மின்சாரத்துறை, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது, தேனி மாவட்ட விவசாயிகளையும் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
http://dlvr.it/RrrmBF
Tuesday, 2 February 2021
Home »
» `20 ஆண்டுகளுக்குப் பிறகு..!' - முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட மின்சாரம்