பிப்ரவரி 22 முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணத்தைக் குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி அளிக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, 2 கிமீ வரையிலான கட்டணம் ரூ.10, 2லிருந்து 5 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.20, 5லிருந்து 12 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.30, 12லிருந்து 21 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.40, 21-32 கி.மீ வரையிலான கட்டணம் ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு பிப்ரவரி 22ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
http://dlvr.it/Rt6XGf
Saturday, 20 February 2021
Home »
» பிப்ரவரி 22 முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு