உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டதில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள், தங்களின் கால்நடைகளுக்குத் தீவனம் எடுப்பதற்காக அருகில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததனால் குடும்பத்தினரும், கிராம மக்களும் சிறுமிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். குற்றம்
நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, அந்த மூன்று சிறுமிகளும் அருகிலிருந்த வயல் வெளியில், அவர்களின் ஆடைகளினால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் 2 சிறுமிகள் ஏற்கனவே இறந்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்ட மற்றொரு சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி ஆனந்த் குல்கர்னி, ``இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர், மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் உன்னாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிறுமிகளின் வாயில் வெள்ளை நுரை இருந்ததால், விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட மருத்துவ ஆய்வில் தெரிகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.ஆனந்த் குல்கர்னி
சிறுமிகள் மூவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தனர் என்கின்றனர் குடும்பத்தினர் . ஆனால் போலிஸ் தரப்பு அதை மறுத்துள்ளது. “நாங்கள் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்னரே உடல்கள் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், கை கட்டப்பட்டிருந்ததா என்று உறுதிபடுத்த முடியவில்ல” என்றனர்.
மற்றொருபுறம், தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறாது. ஆனால், கைகள் கட்டப்பட்ட நிலையில், எப்படி அவர்களால் விஷம் குடித்திருக்க முடியும் என்று சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், “எங்களுக்கு யாருடனும் முன்பகை கிடையாது. இதை யார் செய்திருக்கக் கூடும் என்று எங்களால் யூகிக்கவும் முடியவில்லை" என்று சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
3 girls were found lying unconscious in their own farm in Asoha, Unnao Dist, today. 2 girls died at the hospital, one referred to District Hospital. As per initial info, the girls had gone to cut grass. The doctor states that there are symptoms of poisoning; probe on: SP Unnao pic.twitter.com/IJO4L7GtUk— ANI UP (@ANINewsUP) February 17, 2021
சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இறந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் அவப்பெயர் பெற்ற உன்னாவில், மீண்டுமொரு சம்பவம் நடந்திருப்பது, உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RszBdH
Thursday, 18 February 2021
Home »
» உத்தரப்பிரதேசம்: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகள் படுகொலை! - உன்னாவ் கொடூரம்