அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினை விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வரும் 18-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். முன்னதாக 18-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் நிலுவையில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்தியதாகவும், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
http://dlvr.it/RsNxDk
Wednesday, 10 February 2021
Home »
» “அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடிக்கும் வாக்குறுதி அளியுங்கள்”-ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள்
“அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடிக்கும் வாக்குறுதி அளியுங்கள்”-ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!