கர்நாடக மாநிலத்திலுள்ள ராய்ச்சூர் (Raichur) மாவட்டம், குஷ்டகி (Kushtagi) நகரைச் சேர்ந்தவர் ஹனுமந்த் (38) (Hanumanth Kalegar). இவர் தன் பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்துவருகிறார். கங்காவதியிலுள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றிவருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து சேவையை நிறுத்தியது கர்நாடக மாநில அரசு.NEKRTC
பெரும் நிதி நெருக்கடி காரணமாக, போக்குவரத்து ஊழியர்களுக்குச் சரிவரச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடகாவில் இதற்கான போராட்டங்களும் நடைபெற்றன. மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டபோதிலும், குறைந்த அளவு சம்பளம்தான் வழங்கப்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். போக்குவரத்து ஊழியரான ஹனுமந்த், ஊரடங்கு காலத்தில் சம்பளம் கிடைக்காததால், கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியிருக்கிறார்.
தற்போது போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அனுமந்த் மாதச் சம்பளமாக 16,000 ரூபாய் பெற்றுவந்த நிலையில் தற்போது, 4,000 ரூபாய்தான் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும், கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சம்பளமும் வழங்கப்படவில்லை என்று தனது சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், ``போக்குவரத்து ஊழியரான என்னால், மளிகை பொருள்கள்கூட வாங்க முடியாமல் சிரமப்படுகிறேன். என் வயதான அம்மாவுக்கு மருந்துப் பொருள்கள் வாங்க பணம் தேவைப்படுகிறது. என் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் கடன் வாங்க முடியாது. அதனால், எனது சிறுநீரகத்தை நான் விற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’’ என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். இவரின் இந்தப் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.போக்குவரத்துக் கழக ஊழியர்
இந்தப் பதிவு அதிக அளவில் கவனம் பெற்றதோடு, அவருக்குப் பலரும் தங்களின் உதவிக்கரங்களை நீட்டிவருகிறார்கள். ``அனுமந்த் பணிக்குச் சரியாக வராததே அவருக்குச் சம்பளம் குறைவாக வந்ததற்கான காரணம். அனுமந்த் சரியாக பணிக்கு வரும்படி பலமுறை அவரின் குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறேன்" என்று போக்குவரத்துத்துறை அதிகாரி பி.டி.ஐ-க்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
http://dlvr.it/RscYwm
Saturday, 13 February 2021
Home »
» `சம்பளம் இல்லை... சிறுநீரகத்தை விற்கப்போகிறேன்!’ - கர்நாடக போக்குவரத்து ஊழியரின் அதிர்ச்சிப் பதிவு