இந்தியாவின் ’மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் பிரபல பொறியாளர், கேரள பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக அறிவித்திருக்கிறார். 89 வயதான ஸ்ரீதரன், இந்தியாவின் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.
கர்நாடகா, கோவா, மும்பை ஆகிய மாநிலங்களை இணைக்கும் கொங்கன் ரயில் பாதையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். நாட்டின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோவின் உருவாக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர். இன்னும் பல முக்கிய போக்குவரத்து உள்கட்டமைப்புகள் உருவாவதில் இவரது பங்கு மிக முக்கியமானது.metro rail
இந்திய பொதுப் போக்குவரத்தின் வடிவத்தையே மாற்றி அமைத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவரது பணியை புகழும் வகையிலேயே இந்தியாவின் மெட்ரோ மேன் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
பத்மவிபூஷன் விருது வென்ற அவர், 2019-ம் ஆண்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வருகிறார். தற்போது ப.ஜ.க-வில் இணையப் போவதாக அறிவித்துள்ள நிலையில் மீண்டும் அவர் பெயர் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
பா.ஜ.க-வில் இணைய முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, “நான் கடந்த 10 ஆண்டுகளாக, கேரள மாநிலத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்தேன். ஆனால், இங்கு ஆட்சி செய்த அரசுகளைத் மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பா.ஜ.க மட்டுமே மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என நான் நம்புகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் நான் தயாராக இருக்கிறேன்” என்கிறார் அவர்.பா.ஜ.க
கடந்த 5 ஆண்டுகளில் தென் மாநிலங்கள் தங்கள் வருகையை வலுவாக பதிந்து விட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறும் கட்சிகள், களப்பணிகளில் வலுவான அரண் அமைத்து வைத்துள்ளனர். மத்தியில் ஆட்சி அமைத்திருந்தாலும், பா.ஜ.கவால் இந்த அரணை உடைத்தெறிய முடியவில்லை. மாறாக பா.ஜ.க மாநிலங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சி தான் பிரபலங்களை தங்களோடு இணைத்தல். திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழகத்தில் குற்றப் பின்னணி கொண்ட சிலரும் பா.ஜ.க-வில் இணைக்கப்பட்டது சர்ச்சையானது.
சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் விவகாரம் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பா.ஜ.க எடுத்த முயற்சிகளில் பெரிய அரசியல் மாற்றங்களை பா.ஜ.கவால் ஏற்படுத்த முடியவிலை. அதனால், மக்கள் மத்தியில் மதிப்பு கொண்ட ’மெட்ரோமேன்’ ஸ்ரீதரனின் இணைப்பு கட்சிக்கு கேரளாவில் நன்மதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க நம்புகிறது.
http://dlvr.it/Rt37J3
Friday, 19 February 2021
Home »
» கேரளா: பா.ஜ.க-வில் இணையும் இந்தியாவின் ’மெட்ரோ மேன்’ - யார் இந்த ஸ்ரீதரன்?