நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங் செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே சோதனையாக அமைந்தது. அந்த அணியின் மார்டின் கப்தில் ரன் ஏதும் எடுக்காமலும், டிம் சைப்ரட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து காப்பாற்றுவார் என நினைத்த கேப்டன் வில்லியம்சன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த டேவான் கான்வே மிகச்சிறப்பாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவான் கான்வே 59 ரன்களில் 99 ரன்களை விளாசினார். இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சோதனையே மிஞ்சியது தொடக்க வீரர்களான மேத்யூ வேட், ஆரோன் பின்ச், ஜோஷ் பிலிப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் மிட்சல் மார்ஷ் மட்டுமே 45 ரன்கள் சேர்த்தார். பின்பு அவரும் ஆட்டமிழந்தார். சிக்ஸர் புஸ்பானங்களை விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன் மட்டுமே சேர்த்து அவுட்டானார். இதனையடுத்து 17.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவிடம் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியாவுக்கு, நியூசிலாந்திலும் தோல்வி தொடர்கிறது.
http://dlvr.it/RtDhlR
Monday, 22 February 2021
Home »
» ஒரு ரன்னில் அவுட் ஆன மேக்ஸ்வெல்! - நியூசிலாந்தில் மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலியா