மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்களில் சாதிவாரியாக டோக்கன்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செம்பனார்கோவிலில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்த சைக்கிள்களில் மாணவிகளின் பெயருடன் அவர்களது சாதிப்பிரிவும் குறிப்பிடப்பட்டு டோக்கன் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மாணவிகளும் பெற்றோரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சாதிப்பிரிவைக் குறிப்பிட்டு டோக்கன் வைத்திருந்தது மாணவிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும்விதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். டோக்கன் சர்ச்சை குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி புகழேந்தியிடம் கேட்டபோது, உரிய விசாரணை நடத்தப்படுமென பதிலளித்தார்.
http://dlvr.it/Rrqfxc
Tuesday, 2 February 2021
Home »
» பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்களில் சாதிவாரி டோக்கன்... மயிலாடுதுறையில் அதிர்ச்சி